சேக்கிழாரின் படைப்பாற்றல் 2 0 9 பாயிரம் என்ற பகுதியின் முதற்பாடல், இறைவன் எடுத்துக் கொடுத்த சொல்லை வைத்து எழுந்ததாகலின், புலவர் தம் காப்பிய அமைதி எந்த அடிப்படையில் எழுகின்றது என்பதைப் புரிந்து கொண்டு அப் பாடலிலிருந்தே தம் கருத்தைத் தொடுக் கின்றார். 'உலகெலாம் உணர்ந்து ஒதற்கரியவன்' ' தனைவாழ்த்தி வணங்குவோம் எனக் கூறி அடுத்த பாடலிலேயே ஊன் அடைந்த உடம்பின் பிறவியின் தலையாய கடமை, வரதர் பொற்றாள் தொழலே " என்பதை நிறுவுகின்றார். மானிடர் அனைவரும் செய்ய வேண்டிய பணி இதுவாகும் என்று இரண்டு பாடல்களில் நிலைக்களம் அமைத்துக்கொண்டார். 'மதிவளர் சடைமுடி மன்றுளாரை முன் துதி செயும் கவிஞர், மக்களாகப் பிறந்தவர் டகள் என்ன செய்யவேண்டும் என்று முதல் இரண்டு பாடல்களிலும் தோற்றுவாய் செய்தாரோ அதனையே நாயன்மார் கொண்டு செலுத்தினவர்களாகி விடுகின்றனர். எனவே அவர்கள் வரலாறு களைக் கூறுவதும், கேட்பதும் அடுத்துச் செய்யவேண்டிய செயல் என்பது தொடர்கின்ற தல்லவா? முதல் இரண்டு பாடல்களில் மனிதராகப் பிறந்தவர் கடமை யாது என்று கூறினார். மூன்றாவது பாடலில் அக் கடமையைத் தவறாமல் செய்தவர்களை நாயன்மார்கள் என்றார். 5 ஆவது பாடலில் அளவிலாத பெருமையராகிய அளவிலா அடியார் புகழ் கூறுவேன்' என்று தோற்றுவாய் செய்து கொண்டு தொடங்குவது மிக மிகப் பொருத்தமான செயலாகும். இந்த வகையில், காரண காரிய முறையில் தம் காப்பியத்தின் அடிப்படை, தோற்றுவாய், செல்லும் வழி என்பவற்றை அடுக்கிக் கூறிவிட்டதால் இவர் காப்பியத்தைத் திறனாய்வு செய்யப்புகுபவர் இவற்றை மறவாமல் மனத்தில் பதித்துக் கொள்ளவேண்டும். இந்த அடிப்படை யிலேயே இந் நூலுக்குத் 'திருத்தொண்டர் புராணம் ' என்ற பெயரையும் அவரே சூட்டிவிடுகின்றார். மனிதனுடைய வீழ்ச்சியே என்றும் யாருக்கும் வியப்பைத் தரக்கூடிய பொருள். ஆதலின் அதையே தம் காப்பியப் பொருளாக மில்டன் கொண்டது போல, சேக்கிழாரும் அனைத்து உலகத்துக்கும் பொதுவானதும், மனிதன் என்று பிறந்தவர் அனைவரும் சிந்தித்துத் தெளிய வேண்டுவதுமாகிய ஒரு பொருளைத் தம்காப்பியப் பொருளாக எடுத்துக்கொண்டார்.
பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/237
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை