பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 1 0 பெரியபுராணம்- ஓர் ஆய்வு தொண்டர்கள்பற்றிக் கூறவேண்டிய இன்றியமையாமை உலகிடைப் பிறந்த மனிதன், தன்னைப்பற்றியும் உலகைப் பற்றியும் ஒரளவு சிந்திககத் தொடங்கினால் இந்தப் பேரண்டத் திற்கு ஒரு காரணன் இருத்தல் வேண்டும் என்ற உண்மையை உணராமல் இருக்க முடியாது. அந்த உண்மை புலப்பட்டவுடன் அந்தக் காரணனுக்கும் தனக்கும் உள்ள தொடர்பு யாது? எத் தகையது? தான் அந்தக் காரணனிடம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்? என்பவற்றை அறிந்தே தீரவேண்டிய கடப்பாடுடை யவனாகிறான். இந்த ஆராய்ச்சியின் முடிவில், படைத்த அவன் திருவடிகளை வணங்குவது ஒன்றுதான் செய்யத்தக்கது. என்ற முடிவுக்கு வர அதிக காலம் செல்லாது. அப்படி வணங்கத் தொடங்கிய உடன் தன் வாழ்வை எவ்வாறு அமைத்துக் கொள்ள வேண்டும்? தன்னைச் சுற்றியுள்ள சமுதாயத்துடன் தான் எம்முறையில் பழக வேண்டும்? என்ற வினாக்கள் தோன்றும். பிறப்பெடுத்ததன் பயன் பிறருக்குப் பயன்படும்படியான ஒரு வாழ்க்கை வாழவேண்டும். விலங்குகள்போல் அல்லாமல் ஒரு சில குறிக்கோளுடன் வாழ வேண்டும் என்ற எண்ணங்கள் இறுதியாக அவனிடம் மலரும். இந்தத் தொண்டுள்ளம் கொண்ட மனிதர்கள் பற்றியதே பெரிய புராணம் என்று வழங்கப்பெறும் திருத்தொண்டர் புராணமாகும். வேறு வகையாகக் கூறவேண்டுமாயின், தொண்டர் என்ற தொகுதிப் பெயரை ஒருமையாகக் கொண்டு அதற்குரிய இலக்கணத்தையும் இக் கவிஞரே வகுக்குகின்றார். அடிமைத்திறம் அல்லது தொண்டு என்ற பண்பாட்டிற்கு ஒர் இலக்கணம் வகுத்து, இந்த இலக்கணப்படி வாழ்கின்றவர் யாவராயினும் அவர்கள் அடியார்கள் அல்லது தொண்டர்கள் என்று கூறப்பெறுபவர் என்று வரையறை செய்து கொள்கிறார். எனவே இக் காப்பியம் தனிப்பட்ட பலருடைய வாழ்க்கையைப் பேசுகிறது என்று கூறுவதைக்காட்டிலும் இறைவனிடத்து அடிமைத்திறம் பூண்ட தொண்டரைப் பற்றிக் கூறுவதாகும் என்று கூறினால் அதில் தவறு இல்லை. காப்பியத் தலைமை யாருக்கு? - தொண்டாகிய பண்பே காப்பியத் தலைமை பெறுகிறது - தொண்டு என்ற பண்பே காப்பியத் தலைவனின் இடத்தை இங்குப் பெறுகிறது. இவருடைய காலம்வரை, காப்பியம் என்றால் ஒரு தனிப்பட்டவருடைய வரலாற்றைக் கூறுவதாகும்