பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 2 பெரியபுராணம் - ஒர் ஆய்வு முறையில் இதன் வரலாற்றைக் கூறுவதற்கு வாய்ப்பாக ஒரு வ்ழியை மேற்கொண்டார் இக் கவிஞர்பிரான். எந்த ஒரு பண்பும் ஒரு பண்பியின் மேல் சார்ந்தாலொழியத் தொழிற்படுமாறு இல்லை. எனவே இப் பண்பு யார்மேல் சார்கின்றதோ அவரைத் தொண்டர் என்று அழைக்க முற்பட்டார் கவிஞர். தொண்டர் என்ற பண்பி செய்த செயல்கள் தொண்டு என்ற பண்பின் செயல்களாகவே கருதப்பெறவேண்டும். இவ்வாறு செய்வதால் பலரைப்பற்றிக் கூறும் இதனைக் காப்பியம் என்று கூறல் பொருந்துமா? என்ற வினாவும் எழாமல் செய்துவிடலாம். அன்றியும் தமிழ் மொழியில் தோன்றிய எல்லாக் காப்பியங் களும் ஒரே முறையில் அமைந்துள்ளன என்று கூறவும் இயலாது. சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை, சூளாமணி, சிந்தாமணி, இராமாயணம் என்ற காப்பியங்கள் ஒன்றைப் போல் ஒன்று இல்லை. காப்பிய அமைப்பு, கட்டுக்கோப்பு, தொடங்கல் முறை, பகுதிகள் அமைப்பு என்பவற்றில்கூட இவை ஒன்றைப் போல் ஒன்று அமையவில்லை. இக் காப்பியங்கள் முற்குறிப்பிட்ட பகுதிகளில் தத்தமக்குத் தோன்றிய முறையைக் கடைப்பிடித்து உள்ளன என்பதைக் காணமுடிகிறது. இந்த முறையைப் பின்பற்றி இவற்றின் பின்னர்த் தோன்றிய திருத்தொண்டர் புராணம் தனக்கென்று தனி வழி ஒன்றை வகுத்துக் கொண்டுள்ளது. சேக்கிழார் காப்பியம் பாடத் தேர்ந்தெடுத்த கருப்பொருளும் புதுமையானது. மக்களாகப் பிறந்தவர்கள் இறைவனை வழி படுவது தமது தலையாய கடமை என்பதையும், பிற உயிர்கட்குத் தொண்டு செய்வதும் தம் கடமை என்பதையும், உணரவேண்டும். அதனை உணரத் தொடங்கினால் தன்னலம் தானே கழன்று விடும். இத்தகையவர்களே ஒரு நாட்டையும் அதில் வாழும் மக்களையும் வழி நடத்துபவர்களாவார்கள். இத்தகைய பெரியோர்களைத் தொண்டர்கள் என்று பெரியபுராணம் அழைத்தது. இத் துறையில் வழிநடத்துபவர்கள் ஏனைய சமுதாய, அரசியல் முதலிய துறைகளில் வழி நடத்துபவர்களைப் போன்றவர் அல்லர். தொண்டு பூண்டு, அகங்கார மமகாரங்களை அறவே ஒழித்து, மக்கட்கு முன்மாதிரியாக விளங்கும் இவர்கள் ம்மை மறுமைகளில் எந்தப் பயனையும் எதிர்பார்ப்பதில்லை. மக்களை வழி நடத்துபவர்கள் எனினும் யாரையும் பார்த்து இன்னது செய்க, இன்னது செய்யற்க என்று கூறுவதுமில்லை. பிறர் துயரங்கண்டவழி அதனைத் துடைக்க முற்படுவாரேயன்றி அது முடிந்தவுடன் அம் மக்களின் நன்றியைக்கூட எதிர்பார்ப்ப