பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழாரின் படைப்பாற்றல் 2 I 3 தில்லை. எந்த நேரத்திலும் தம் மனம் முழுவதையும் இறை வனிடத்தே வைத்திருத்தலின் இவர்கள் யாரிடமும் எதனையும் எதிர்பார்ப்பதுமில்லை. யாரிடமும் வெறுப்பு, காழ்ப்பு கொள்வதுமில்லை. ஒரோ வழி இவர்கள் யாரையேனும் தண்டித்தால் அது மருத்துவன், அறுவை மருத்துவம் செய்வது போன்றதேயாகும். எந்தக் காலத்திலும் இந்த உலகமும், அதில் வாழும் மக்களும் நலத்துடன் வாழ்ந்து முன்னேறவேண்டுமெனில் அதனை முன்னேறச் செய்யும் ஆற்றல் பெற்றவர்கள் மூலமே அது நடந்தேறி வருகிறது. 'சாதாரண மக்கள் இரயில் பெட்டி போன்ற வர்கள். அப் பெட்டிகள் எவ்வளவு அழகுடனும் பளபளப்புடனும் இருந்தாலும் அவை தாமாக எங்குஞ் செல்ல இயலாதவை. கரிய நிறமும் அழகற்ற வடிவும் உடைய இஞ்சின்களே தாமும் முன்னேறி இப் பெட்டிகளையும் இழுத்துச் செல்லும் வல்லமை உடையவை. அதே போலத்தான் தொண்டர்கள், அடியார்கள் என்பவர்கள் இந்த இஞ்சின் போன்றவர்கள் என்று பகவான் இராமகிருஷ்ணர் கூறியதை நினைவில் கொள்ளுதல் நலம் பயக்கும். உண்டால் அம்ம இவ்வுலகம்! இந்திரர் அமிழ்தம் இயைவதாயினும் இனிதெனத் தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்; துஞ்சலுமிலர் பிறர் அஞ்சுவ தஞ்சி, புகழெனின் உயிருங் கொடுக்குவர்; பழியெனின் உலகுடன் பெறினுங் கொள்ளலர்; அயர்விலர் அன்னமாட்சி அனைய ராகித் தமக்கென முயலா நோன்தாள் பிறர்க்கென முயலுநர் உண்மையானே!" என்பது புறப்பாடல். சேக்கிழார் இவ்வுலகிடைத் தோன்றுவ தற்கு ஆயிரம் ஆண்டுகட்கு முன்பேகடிட இளம்பெருவழுதி என்ற பாண்டியன் இப் பேருண்மையைக் கண்டு கூறியுள்ளான். இப் பாடலின் இறுதி இரண்டடிகள் தொண்டர்கட்கு வேண்டிய உயிர் நாடியான இலக்கணத்தைக் கூறுகின்றன. முதலில் உள்ள அடிகளும் இத்தொண்டு மனப்பான்மையைப் பெறுவதற்குரிய வழி முறைகளை விவரிக்கின்றன. தமக்கு ஆயிரம் ஆண்டுகளின் முன்னர் ஒரு பாண்டியன் கண்ட காட்சியைச் சோழப் பேரரசின் முதலமைச்சர் மறுபடியுங் காண்கிறார். பாண்டியன் இலக்கணம் கூறி நிறுத்திவிட்டான்; அமைச்சர் அதற்கு இலக்கியங் காட்டி அவ் விலக்கணத்தை நிறுவும் பணியில் ஈடுபட்டார்.