பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 I 4 பெரியபுராணம் - ஒர் ஆய்வு தொண்டு என்ற பண்புதான் உலகைக் காக்கும் பேராற்றல் படைத்த்தது என்பதைச் சேக்கிழார் தெளிவாகக் காணமுடிந்தது. வெற்றி எக்களிப்பில் மிதக்கும் ஒரு நாட்டைச் சுற்றிப்பார்க்கும் நுண்ணறிவுடைய அமைச்சரின் கூரிய பார்வையிலிருந்து இக் குறைபாடு தப்பவில்லை. எல்லாரும் பல்லக்கில் ஏறத் தயராக இருந்தனர். தொண்டுள்ளம் மறைந்துவிட்டதனால் யாரும் பல்லக்கைத் தூக்கிச் சுமக்க முன்வரவில்லை. மக்கள் இன்ப வேட்டையில் எளியராயினரே தவிர, வாழ்வில் ஒரு குறிக்கோள் வேண்டுமென்று நினைவார் குறைவாகவே இருந்தனர். இத்தகைய சூழலில்தான் தொண்டு செய்யும் தொண்டர் என்ப வர்களின் பெருமையை உள்ளவாறு உணர்கின்றார் காப்பியப் புலவர். ஏதோ ஒரு தொண்டரைப்பற்றி அற்புதமான காப்பியம் இயற்றியிருக்கலாம். ஒரு பெரும் காப்பியத் தலைவனுக்கு வேண்டிய அனைத்து இலக்கணங்களும் அமைந்த திருஞான சம்பந்தர் வரலாறு சேக்கிழார் கையில்தான் இருக்கிறது. என்றாலும், தனி ஒருவருடைய வரலாற்றை எடுத்துக்கொண்டு காப்பியமாகப் பாடுவதன் மூலம், மாபெருங் காப்பியப் புலவர் என்ற பெயரைமட்டும் பெறச் சேக்கிழார் விரும்பவில்லை என்பது தெளிவு. இவ்வாறு பாடி இருப்பின் அவர் சிறந்த பெயரைப் பெற்றிருக்கலாமே தவிர அவர் திருத்தொண்டர் புராணத்தை இயற்றியதால் பெற்ற பயனைப் பெற்றிருக்க முடியாது. சைவ சமயக் கொள்கைகளைப் பரப்புவதே அவர் நோக்கமாக இருந்திருந்தால்கூடத் தனிமனிதர் பற்றிய காப்பியம் பாடி இருந்தால் பெரும் பயன் ஏற்பட்டிருக்காது. காரணம் தனி மனித காப்பியம் பாடித் தம் சமயத்தை வளர்க்கவேண்டும் என்று முனைந்த மணிமேகலை, சிந்தாமணி என்பவை அப் பயனைப் பெறவில்லை. இன்று பெரியபுராணம் காப்பியமா? இல்லையா? என்ற ஆராய்ச்சியில் ஈடுபடக் காரணம் யாது? தண்டியலங்காரம் போன்ற வடமொழி நூல்களில் இதுதான் காப்பிய இலக்கணம் என்று கூறியுள்ளதை வேத வாக்கெனக்கொண்டு அந்த இலக்கணத் திற்கு இது பொருந்தி வரவில்லையே என்று ஆதங்கப்படுவதுதான் காரணம். பெருங் கவிஞர்கள் என்றுமே தமக்கென ஒரு வழி வகுத்துக் கொண்டு செல்வது வழக்கம். உதிரிப் பாடல்கள் நிறைந் திருந்த காலத்தில் வகுக்கப்பெற்ற தொல்காப்பியத்தில் காப்பிய இலக்கணம் தேடுவது, அவர் கூறிய எந்தப் பகுதியிலாவது அவருக்குப் பின் ஆயிரத்தைந்நூறு ஆண்டுகள் கழித்துத் தோன்றிய ஒரு படைப்பைத் திணிக்க முற்படுவது என்ற இவை எல்லாம் பழமையை விடாமல் போற்றுவதால் விளைந்த பயன்கள். சிந்தா