சேக்கிழாரின் படைப்பாற்றல் 2 I 9 திருக்கூட்டம் என்ற ஒரு தலைப்பில் ஏன் சில பாடல்களைப் பாடவேண்டும்? என்றுதான் கேட்கத் தோன்றும். அதிலும் இப் பகுதியில் எந்த ஒருவருடைய பெயரும் சுட்டப்படவில்லை. அகப்பொருள் இலக்கணம் பேசுவது போல, சுட்டி ஒருவர் பெயர் கூறப்படாமல் தொண்டர்கள் இப்படி இப்படி இருப்பார் கள் என்று கூறுவது ஏன்? என்ற வினாத் தோன்றியே தீரும். தொண்டு என்ற பண்புக்கே காப்பியத் தலைமை தந்துவிட்டார். அத் தொண்டை மேற்கொண்டவர்களுக்குத் திருக்கூட்டம் எனப் பெயர் சூட்டினார். அப் பண்பின் பல்வேறு இலக்கணங்களையும் கூறும்போது எப்படி வெளிப்படும் என்ற வினாத் தோன்றும் அன்றோ? அதற்கு விடைதான் தொண்டர்கள் ஈர அன்பினராய், கந்தை மிகை என்ற கருத்துடையவராய், எப்பொழுதும் ஈசன் திருவடியை மனத்தில் பதித்தவர்களாய் இருப்பார்கள் எனப் பேசுவது. தொண்டு என்ற பண்பு என்ன என்ன செய்யும் என்று கூறுவதற்கும் இடமாகும். அதனாற்றான் தனி ஒருவர் பெயரைச் சுட்டாமல் பொதுவாகக் கூறியதாகும். எனவே திருக்கூட்டச் சிறப்பு என்று இங்கே கூறுவது அப் பண்பைப் பற்றிய விளக்கமே யாகும் என்பதை அறிகின்ற பொழுதுதான் இக் காப்பியப் புலவர் மேற்கொண்ட புது வழி புலனாகும். அது புலனானவுடன் உதிரிக் கதைகள் காப்பியமாக முடியுமா என்ற வினா மறைந்து போகிறது. தொண்டு என்ற பண்பின் வரலாறுதான் பெரிய புராணம். அந்தப் பண்பு எவ்வாறெல்லாம் வெளிப்படும்? எவ்வாறெல்லாம் பணிபுரியும்? என்பதைக் கூறவரும் பொழுது இத்தனி வரலாறுகள் அனைத்தும் அந்த ஒன்றின் பல்வேறு செயல்களே என்பதும் வெளிப்படும். ஒரு காப்பியத் தலைவன் எவ்வெவற்றில் ஈடுபடுவான் என்பதனைப் பிற்காலத்தில் தோன்றிய தண்டியலங்காரம் கூறிற்று. அது வடமொழியில் உள்ளதை அப்படியே மொழிபெயர்த்ததும் அன்று; சில மாறுதல் களுடன் தோன்றியவற்றைக் கூறலாயிற்று. தமிழ்க் காப்பியங்கள் ஒன்றானும் அதில் கூறப்பெற்ற உறுப்புக்கள் அனைத்தையும் பெற்று விளங்கவில்லை. எனவே அந்த இலக்கணத்துள் ஒரு காப்பியத்தை அதுவும் தமிழ்க் காப்பியத்தை அடக்க வேண்டும் என்று கருதுவதும் பொருத்தமாக இல்லை. சிலம்பு, மேகலை என்பவற்றில் காணப் பெறாவிடினும் நாடு நகரம் என்பவற்றின் சிறப்பைக் கூறிக் காப்பியத்தை தொடங்க வேண்டும் என்ற நியதி எட்டாம் நூற்றாண்டை அடுத்துத் தமிழ் மொழியிலும் புகுந்துவிட்டது என்றே கொள்ளவேண்டும். ரனைய பகுதிகளில் புது வழி வகுத்த சேக்கிழாராலும் இந்த
பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/247
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை