சேக்கிழாரின் படைப்பாற்றல் 22 I என்றால், பெரியபுராணம் முக்காலத்தும், எல்லாவிடத்தும் உள்ளவர்களை எவ்வாறு பாடமுடியும்?. திருக்கூட்டச் சிறப்பு என்பதன் உட்கருத்து யாது? தொண்டுள்ளம் படைத்துத் தனக்கென வாழாப் பிறர்க்குரிய வர்களாய் வாழும்பெரியார்கள் உலகம் முழுவதிலும் எக்காலத் தும் உளர். அவர்கள் அனைவரையும் பாடுதல் இயலாத காரியம். எனவே இவர்கள் அனைவருடைய பொது இலக்கணத்தைத் திருக் கூட்டச் சிறப்பு என்ற பகுதியில் கூறிவிட்டு அவர்களுள் குறிப்பிட்ட ஒரு சிலரை மட்டும் பாட எடுத்துக் கொள்கிறார் சேக்கிழார். அவருக்கு முன்னரே இந்த முறையில் தேர்ந்தெடுத்த சிலரைப் பற்றிச் சுந்தரர் பாடியுள்ளார். எனவே தேர்ந்தெடுக்கும் பணி சேக்கிழாருக்கு இல்லாமல் போய் விடுகிறது. அவரது வேலை எளிதாகிவிட்டது. சுந்தரர் தேர்ந்தெடுத்தவர்களையே சேக்கிழார் பாட எடுத்துக்கொள்கிறார். சோணாட்டில் உள்ள திருவாரூரில் தேவாசிரிய மண்டபத்தில் குறிப்பிட்ட கால அளவில் வாழ்ந்த தொண்டர்கள்பற்றிப் பாடுகிறேன் என்று தொடங்கு கிறார். திருக்கூட்டச் சிறப்பில் தொண்டர்கள் பொது இலக்கணங் கூறிவிட்டுச் சுந்தரரால் பாடப் பெற்றவர்களை மட்டுமே பாட எடுத்துக் கொள்கிறார் கவிஞர். இக் கூட்டத்தாரின் சிறப்பியல்புகள் யாவை என்ற வினாவிற்கு விடையாகப் பல பாடல்கள் பாடுகிறார். தொண்டு என்ற பண்பையே தம் முழுவடிவாகப் பெற்றவர்கள் இவர்கள் எனக் கூறுகிறார். 'அரந்தை தீர்க்கும் அடியவர் ' 'அகில காரணர்தாள் பணிவார்கள்; தாம் அகில லோகமும் ஆளற்கு உரியர் ' 'கைத்திருத் தொண்டு செய் கடப்பாட்டினார்’ 'பூதம் ஐந்தும் நிலையிற் கலங்கினும் மாதொர் பாகர் மலர்த்தாள் மறப்பிலார் ஒது காதல் உறைப்பின் நெறி நின்றார் கோதிலாத குணப் பெருங் குன்றனார். ' } 3 தொண்டு செய்பவர்கட்கு வேண்டப்படும் தலையாய பண்பு கள் இவையாம். முதலாவது அஞ்சாமை, அச்சத்தின் அடியில் நிற்பது தற்காப்புணர்ச்சி, அதன் அடியில் நிற்பது தன்னலம். எனவே 'பூதம்.... மறப்பிலார்' என்ற அடியால் இவர்கள் அஞ்சா நெஞ்சர்கள் என்பதைக் கூறினார். 'அஞ்சுவது அஞ்சாமை
பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/249
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை