22.2 பெரியபுராணம்- ஓர் ஆய்வு பேதைமை' என்று அறநூல் கூறுகிறதே அவ்வாறு இருக்க இவர்கள் எதற்கும் அஞ்சமாட்டார்கள் என்று கூறுவது பொருந் துமா? என்ற வினாவை எதிர்பார்த்து இறைவன் திருவடியை மறவாமையால் இவர்கள் தவறான வழிச்செல்வது இயலாது என்பதையும் குறிப்பாகக் கூறியவாறாயிற்று. இந்தக் கருத்தைக் கவிஞர் பாடக் காரணமாயிருந்தவை 'மண்பாதலம் புக்கு மால்கடல் மூடி மற்று ஏழுலகும் விண்பால் திசைகெட்டு இருசுடர் விழினும் அஞ்சல் நெஞ்சே ' 'அஞ்சுவது யாதொன்றுமில்லை; அஞ்ச வருவது மில்லை ' என்ற பாசுரப் பாடல்களேயாம். குற்றமற்ற நற்குணங்களின் உறைவிடமாவார் இவர்கள். இவர்களுடைய அஞ்சாமை முதலியனவும், நற்குணத் தொகுதியும் இவர்கட்கு மிகவும் பயன் பட்டிருக்கலாம். இவர்கள் முன்னேற்றத்திற்கு உதவி இருக்கலாம். ஆனால் தொண்டர் என்ற முறையில் இப் பண்புகள் பிறருக்குப் பயன்படுமா? தன்னலத்தைத் துறந்து பிறருக்குப் பயன்படும் செயல்களைத்தாமே தொண்டு என்று கூறுகிறோம். எனவே அத்தகைய பண்புகள் உண்டா என்பதற்கு விடை கூறுவார் போல அரந்தை தீர்க்கும் அடியவர் ' என்று பேசுகிறார். அரந்தை என்றால் துன்பம். யாருடைய துன்பத்தைத் தீர்க் கிறார்கள் இவர்கள்? தம் கண்முன்னர் யாரேனும் துன்புற்றால் அத் துன்பத்தைத் தீர்க்காமல் இவர்கள் அப்பால் நகர்வதில்லை. சம்பந்தர் விடந்தீர்த்தது, விழிமிழலையில் பஞ்சந் தீரும்வரை உணவளித்தது, நாவரசர் அப்பூதியார் மகனை எழுப்பியது, சுந்தரர் அவினாசியில் அந்தணச் சிறுவனை உயிர்ப்பித்தது முதலாயின. உதாரணங்களாம். I & அடுத்து 'கைத்திருத் தொண்டுசெய் கடப்பாடினார்’ என்பதும் ஆழ்ந்து சிந்தித்தற்குரியது. தொண்டு என்றாலே கைத்தொண்டு அதில் முக்கியமாக இடம் பெற வேண்டும் அன்றோ? கைத்தொண்டு என்றால் யாருக்காகச் செய்யப் படுவது? தமக்காகவா? இல்லையே? பிறருக்காகத்தானே கைத் தொண்டு செய்கின்றனர். சமுதாயத்தில் உள்ளவர்களின் மனத்தில் தோன்றும் அரந்தையைப் போக்குகின்றனர். அவர்கள் நல்வாழ்வுக்கு வேண்டிய கைப்பணியும் செய்கின்றனர். தொண்டு என்னும் பண்பு, பிறர் அரந்தை போக்குகிறது; கைத்தொண்டு செய்கிறது. இவை இரண்டும் சமுதாயத்தில் உள்ளவர்கட் காகவே செய்யப்படுகிறது.
பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/250
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை