பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழாரின் படைப்பாற்றல் 22 3 தொண்டுபற்றிக் கூறவந்த புலவர் இதனை மட்டுங் கூறிச் செல்லாமல் 'அகில காரணர் தாள் பணிவார் ' என்றும் 'மாதொர் பாகர் மலர்த்தாள் மறப்பிலார்' ' என்றுங் கூற வேண்டிய தேவை யாது? பன்னிரண்டாம் திருமுறை என்று வைக்கப்பட வேண்டுமாயின் பக்தியைப் பற்றிப் பாடவேண்டும் என்ற கருத்தினாலோ, அன்றி இத் தொண்டர்களின் பக்தியை அழுத்திக் கூறினால்தான் பெரியபுராணத்தில் இடம் பெறுவர் என்ற காரணத்தாலோ, இவர்கள் இறையுணர்வைக் கவிஞர் இவ்வாறு அழுத்திக் கூறவில்லை. உடல் தொண்டின் இன்றியமையாமை மனித மனத் தத்துவத்தை மிக நன்றாக அறிந்தமையால்தான் கவிஞர் இதனை அழுத்தமாக இருமுறை கூறுகிறார். பிறருக்குத் தொண்டு செய்பவர்கள் மிகமிக எளிதாக அகங்காரம் கொண்டு விடுவர். நம்முடைய உதவியால்தானே இவர்கள் வாழுகிறார் கள் என்ற அகந்தை உண்டாகி, அதன் பயனாக அலட்சியமும் தோன்றிவிடும். இன்று சமுதாயப்பணி செய்யச் செல்கின்ற நம் சோதரர்கள் அந்த ஏழைகளிடத்தில் நடந்து கொள்வதைப் பார்த்தால் உண்மை விளங்கிவிடும். இத்துணை அலட்சியம் ஏன் வருகிறது? உதவி பெறுபவர்களின் தாழ்ந்த நிலையையும் அவர்கட்கு உதவ வந்த தங்கள் உயர்ந்த நிலையையும் சாதாரண மனிதர்கள் நினையாமல் இருத்தல் முடியாது. பணிவு இருப்பது போல வாயினால் பேசிக் கொள்ளலாம். ஆனால் மனத்தில் உண்மைப் பணிவு வருவது கடினம். இத்தகையவர்கட்கு உண்மையான பணிவு வரவேண்டுமா யின் ஒரே வழி இறையுணர்வுதான். இறையுணர்வு உடையவர்கள் மட்டுமே சமுதாயத்தில் தாரதம்மியம், வேறுபாடு என்பவற்றைப் பாராட்ட மாட்டார்கள். உதவி செய்பவர், செயப்பட்டவர் ஆகிய இருவருமே இறைவன் படைப்புகள் என்ற உண்மையான உணர்வு வருமேயானால் அவர்கட்கு அலட்சிய மனப்பான்மை வாராது. எனவேதான் தொண்டுக்கு அடிப்படை இறையுணர்வு என்பதை வலியுறுத்துகிறார் கவிஞர். பன்னூறு காவதம் தாண்டித் தம்முடைய வளமான வீட்டையும் வாழ்வையும் துறந்து வந்து நம்மூரில் வாழும் தொழு நோயாளர்க்குத் தொண்டு செய்ய வேண்டுமானால் அது யாரால் முடியும்? விளம்பரத்துக்காகச் செய்பவர்கள் நிழற்படம் எடுப்பதற்காக இரண்டொரு நாள் தான் அப்பணியில் ஈடுபட முடியும். ஆனால் ஆண்டுக்கணக்கில் ஈடுபடமுடியுமா? தங்களுடைய வறுப்புணர்ச்சியையோ, அலட்சிய மனப்பான்மையையோ ஒரு கடுகளவு காட்டினாலும்