சேக்கிழாரின் படைப்பாற்றல் 227 இதன் பயனாகக் காப்பியத் தலைவர் ஒருவரா? பலரா? உதிரிக் கதைகள் கோக்கப்பட்டால் அது எப்படிக் காப்பியம் ஆக முடியும்? என்பன போன்ற வினாக்கட்கு இனி இடமே இல்லை! தொண்டு என்னும் பண்புதான் காப்பியத் தலைமை ஏற்பது. அத் தொண்டு என்னும் பண்பு நம்பியாரூரர், திருஞானசம்பந்தர், திருநீலகண்டர், திருநாளைப் போவார் என்ற மனிதர்களின் உட்புகுந்து எப்படிப் பணி செய்கிறது. என்பதை அறிவிப்பனவே புராணத்தில் வரும் பிற வரலாறுகள். தொண்டு என்ற ஒரே பண்பு, ஒருவரை வாணாள் முழுவதும் அழகிய இளம் மனைவியைத் தொடாமல் இருக்கச் செய்கிறது. அதே பண்பு நம்பியாரூரரை இரண்டு திருமணங்கள் செய்து கொள்ளச் செய்கிறது. சிறுத்தொண்டரைத் தம் மகனை அரிந்து கறி சமைக்கச் செய்கிறது. சிவபிரானுக்கு என்று வைத்து விட்டுப்போன நெல்லைப் பஞ்ச காலத்தில் உண்டு விட்டார்கள் என்ற காரணத்திற்காக, அவர்கள் அத்தனை பேரையும் கொல்லுமாறு ஒருவரைச் செய்கிறது. சிவலிங்கத்தின் மேல் சிலந்திப்பூச்சி ஊர்வதை வாயால் ஊதிப் போக்குமாறு ஒர் அம்மையாரைச் செய்ததும் இந்தத் தொண்டுதான். வாயால் ஊதி இலிங்கத்தை அனுசிதப்படுத்திவிட்டாள் என்று அதே மனைவியை ஒருவர் துறந்ததும் இத் தொண்டு மனப்பான்மையில்தான். அதே சிவலிங்கத்தின் மேல் தினம் ஒரு கல்லை எடுத்து ஒருவர் அடித்ததும் இத் தொண்டு மனப்பான்மையினால் தான். தொண்டுள்ளம் என்ற ஒன்று இப்படி முற்றிலும் ஒன்றுக் கொன்று முரணான செயல்களைச் செய்யுமாறு தூண்டுமா? என்று சிலர் மனத்தில் ஐயம் எழக்கூடும். விஞ்ஞான ரீதியாக இதற்கு விடையுங் காணமுடியும். ஒரு ரோஜாச் செடி இருக்கிறது. அதன் வேர்தான் அதற்குரிய ஊட்டச்சத்தைத் தயார் செய்து செடிக்கு மேலே அனுப்புகிறது. செடியின் மேற்பகுதி, அடிப்பகுதி, இடைப் பகுதி, நுனிக்கிளை, முற்றிய இலை, துளிர், அரும்பு, மலர், என்ற இத்தனை பகுதிகளும் வெவ்வேறானவை தாமே? இவை ஒவ்வொன்றும் நன்கு வளர்ச்சியடைந்து செடி தளதளப்பாக இருப்பதற்குக் காரணமாய் இருப்பது வேரிலிருந்து மேலே வரும் ஊட்டச் சத்துத் (sap) தானே? ஒரே ஊட்டச்சத்து, அடிச் செடியை கெட்டியாகவும், நுனிக்கொம்பை மென்மையாகவும், தளிரை மென்மையும் சிவப்பு நிறமுமுடைய தாகவும், முற்றிய இலைைையப் பசுமை நிறம் உடைய தாகவும், அரும்பை மூடிக்காப்பதாகவும், மலரைப் பளிச்சென்ற நிறமுடையதாகவும் செய்கின்றதல்லவா? ஒவ்வொரு தொழிலுக்கும்
பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/255
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை