பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. அடியார்கள் யார்? சைவ சமயத்தைச் சேர்ந்தவர்கள் பலர் இருக்க அறுபத்து மூவரை மட்டும் சேக்கிழார் தேர்வு செய்தது ஏன்? சேக்கிழார் தாம் பாட எடுத்துக்கொண்ட அடியார்களின் வரலாறுகளை அறிந்திருந்ததுடன் அடியார்களின் பொதுவான சில இலக்கணங்களையும் அறிந்திருந்தார். 'திருக்கூட்டச்சிறப்பு என்ற பகுதியில் அவற்றுள் இன்றியமையாத குறிப்புக்களை மட்டும் சுருக்கித் தந்துள்ளார் என்பதும் முன்னர்க் கூறப் பெற்றது. இத்தலைப்பு, இன்றைய உலகு விஞ்ஞானம், மனவியல் முதலியன வளர்ந்துள்ள நிலையில் அடியார்கள் பக்தர் கள் என்பவர்கள் பற்றி என்ன நினைக்கின்றது என்பதை ஒரளவு காண முற்படுவதேயாகும். சேக்கிழார் கூறும் அடியார்களை வெறும் பக்தர்கள் (Devotees) என்று நினைப்பது சரியன்று மெய்ப் பொருளை நாடிச் செல்பவர்களை மிஸ்டிக்ஸ் (Mystics) என்று மேனாட்டார் கூறுவர். அந்தச் சொல்லின் நேர்ப் பொருளுடையதாகவே அடியார்கள் என்ற சொல்லைக் காண வேண்டும். இங்குக் கூறப்பெற்ற அடியார்களும் சைவ சமயத்தைப் பின்பற்றியவர்கள் தாமே? அப்படியானால் கோடிக்கணக்கான சைவர்கள் வாழ்ந்த, வாழும், நாட்டில் ஒரு சிலரை மட்டும் பிரித்து அடியார்கள் என்று ஏன் பெயர் சூட்டவேண்டும்? என்ற ஐயம் எழுமானால் அது நியாயமானதேயாகும். எந்த ஒரு சமயமா யினும் அதில் கூறப்பெற்ற கொள்கையில் ஒரளவு நம்பிக்கை வைத்து அது கூறும் வழிமுறைகளைப் பின்பற்றுபவர்கள் அச் சமயத்தைச் சேர்ந்தவர்கள் எனப்படுவர். இவர்களைப் பொறுத்தமட்டில் இவர்கள் மேற்கொண்டுள்ள சமயம் இவர் கட்காக முன்னரே செய்து வைக்கப்பெற்றுள்ளது. இவர்கள் அதிற் கூறிய வழி முறைகளைப் பழக்கங் காரணமாக அப்படியே பின்பற்றுபவர்களாவர். இன்று விபூதி இடுதல், உருத்திராக்கம் அணிதல், சிவபூசை செய்தல், கோயிலுக்குப் போதல் முதலிய வற்றைச் செய்கின்ற பலரும் மரபுபற்றியும், பழக்க வழக்கம்