பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 3 4 பெரியபுராணம் ஒர் ஆய்வு பல்வேறு வாழ்க்கைமுறையில் ஈடுபட்டவர்கள் பெரியபுராணத்துள் வரும் அடியார்களைப் பொறுத்த மட்டில் இவர் கூறுவது ஒரளவு பொருத்தமுடையதாயினும் முற்றிலும் பொருந்துவதன்று. அனுபவம் மாறுபடினும் இவ்வடி யார்கள் அனைவரும் தொண்டு செய்தல், சிவபெருமானை முழுமுதற் பொருளாக ஏற்றுக் கொள்ளுதல், தன்னலத்தை அடியோடு துறந்துவிடல், பிறர் பொருட்டாக வாழ்தல், அச்சம் என்பதை வாழ்விலிருந்து அகற்றுதல், தம் குறிக்கோளுக்காக உயிரைவிடச் சித்தமாயிருத்தல் என்பவற்றில் ஒரே இயல்புடைய வர்களாய் இருந்தமை அறியப்பட வேண்டும். இந்தப் பொது இயல்புகளை வைத்துக் கொண்டுதான் இவர்கள் அனைவரையும் அடியார்கள், நாயன்மார்கள் என்று கூறுகிறோம். வரலாற்றில் உள்ள ஒருமைப்பாடு இந்தச் சமய அனுபவத்தைப் பெறுவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டா? இன்றேல் ஒருசிலருக்கு மட்டுமே அந்த வாய்ப்பு உண்டா? என்ற வினா எழுவது நியாயமே. இந்த வினாவிற்கு விடை பெரிய புராணமே ஆகும். அந்தணர் முதல் அரிசனர் வரை அங்கு உளர். முத்தீ வளர்த்து வேள்வி செய்யும் அந்தணர் முதல் (நீலநக்கர்), சட்டி செய்து கொடுப்பதையே தொழிலாகக் கொண்டவர் வரை (திருநீலகண்டர்) எல்லாத் தொழில்களிலும் ஈடுபட்டவர்கள் அதில் உண்டு. மூன்று வேளையும் சிவபூசை செய்கின்றவர்கள், கழுத்தளவு நீரில் நின்று உருத்ர ஜபம் (உருத்திர பசுபதியார்) செய்பவர்கள், இத்தகைய செயல்கள் எதுவும் செய்யாமல் வீட்டில் உள்ள அனைவருக்கும் திருநாவுக்கரசு என்று பெயரிட்டு நாவுக்கரசை நேரிடையாகப் பாராவிடினும், அவர் பால் எல்லையற்ற அன்பு செய்தவரும் (அப்பூதியடிகள்), அதில் உண்டு. சிவனடியாரைக் குறைவாய்ப் பேசியவர்கள் நாக்கைத் துண்டித்தவரும் (சத்தியார்), பெரியபுராணத்தில் இடம் பெறு கிறார். சிவலிங்கத்தைத் தினந்தோறும் கல்லால் அடித்தவரும் (சாக்கியர்), அப் புராணத்தில் இடம் பெறுகிறார். சிவலிங்கத்தின் எதிரே மான் கறியை வைத்து உண்க என்று வேண்டுவதுடன் அந்த லிங்கத்தின் தலையின் மேல் வைக்கப்பட்டிருக்கின்ற மலர் களைத் தம் செருப்பு அணிந்த காலால் தூரத் தள்ளும் செயலை எவ்விதமான வேறுபாடும் அற்றுச் செய்யும் ஒருவரும் (கண்ணப்பர்) அதில் உள்ளார். இவர் செயலை அறியாமல் சிவபெருமான் எதிரே இறைச்சி கிட்க்கிறதே என்று கதறி அழுது அவற்றைக் கூட்டித் தள்ளிவிட்டு மறுபடியும் சென்று ஆற்றில் குளித்துவிட்டு வந்து பிராயச்சித்தம் செய்பவரும் (சிவ