பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடியார்கள் யார்? 2.37 சமய அனுபவத்தை ஒருவர் பெற்று அதனை மற்றவர்கட்கு வழங்க வேண்டுமாயின், மொழி என்ற கருவியைத் தான் பயன் படுத்துகின்றார். பிறருடைய எண்ண ஓட்டங்களை நம்முடைய செல்வாக்கில் கொண்டுவர நாம் பயன்படுத்தும் கருவியே மொழி என்பதாகும். நாம் பேசுவதும் எழுதுவதும் எதற்காக நம்மை யல்லாத பிறருக்குப் புதிய செய்திகளைத் தரவும் அவர்களையும் நம் சிந்தனைவழித் திருப்பவும்தானே மொழி என்ற கருவியைப் பயன்படுத்துகிறோம்? புதிய எண்ணங்களையும் அனுபவங்களையும் ஒருவரிடம் தூண்டுவதற்கு மொழி சாதாரண உலகியல் முறையில் பயன்படு கிறது என்றால் த மொழி என்ற கருவியைத்தான் சமய அனுபவம் பெற்ற ஞானிகளும், மகான்களும், அடியார்களும், நாயன்மார்களும் பயன்படுத்துகின்றனர். பகவத்கீதை, தேவார, திருவாசக, நாலாயிரப்பிரபந்தங்கள், விவிலியம், தம்ம பதம். கொரான் முதலிய தெய்வீக நூல்கள் இதே தொழிலைச் செய்ய மொழியைப் பயன்படுத்துவதை அறியமுடியும். உலகில் உள்ள ஒவ்வொரு சமயமும் சில நூல்களை அச் சமயத்துக்குரிய தெய்வீக நூல்கள் என்று எடுத்து வைத்துக்கொண்டுள்ளன என்றாலும் இவை அனைத்தும் மொழியின் உதவியாலேயே தம் பணியைச் செய்கின்றன. இன்றும்கூடச் சமயத்தைப் பரப்ப வரும் பெரியோர்கள் பலரும் மொழி என்ற கருவியைத்தானே பயன் படுத்துகின்றனர். மந்திரம் என்ற சொல்லின் பொருள் யாது? அப்படியானால் சமய அனுபவத்தைக் கூறும் இந் நூல்கள் நாம் அன்றாடம் பேசும் மொழியிலிருந்து வேறுபட்ட மொழியைப் பயன்படுத்துகின்றனவா? இல்லை! நாம் பயன்படுத்தும் அதே மொழிதான் பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் அதனைப் பயன்படுத்துபவர் பெற்றுள்ள நுண்மையான அனுபவத்தில் தோய்ந்து வரும்பொழுது, அவர்கள் பயன்படுத்தும் சாதாரணச் சொற்கள்கூட மிகப் பெரிய ஆற்றலைப் பெற்றவிடுகின்றன. அம்பு ஒன்றேயாயினும் அதனை எய்கின்றவன் தோளாற்றலைப் பொறுத்து அது செல்லும் தூரம் மிகுதிப்படுவது போல, சொற்கள் ஒத்தனவேயாயினும் அவற்றைப் பயன்படுத்துபவர்கள் ஆற்றலைப்பொறுத்து அச்சொற்கள் ஆற்றலைப் பெறுகின்றன. இக் கருத்தை இன்று மனவியலார் ஆராய்ந்து கூறினாலும், தமிழர் களைப் பொறுத்தமட்டில் இது மிகப் பழமையான ஒன்றாகும். ஆசிரியர் தொல்காப்பியனார் சொற்கள், அவற்றின் தோற்றம்,