அடியார்கள் யார்? 2 39 அதனாலேயே குறிக்கும் என்று கூறினார். ஆனால் நிறைமொழி என்பது அத்தகைய சொற்களையன்று. இதனை நிறைமொழி என்றமையாலேயே ஏனைய மொழிகள் குறைமொழி என்பது பெறப்படும். அப்படியானால் இந்தச் சொற்கள் மட்டும் நிறை மொழியானது எவ்வாறு? அவை நிறைமொழியானது அவற்றைப் பயன்படுத்திய மாந்தரைப் பொறுத்தது. அவர்கள் சாதாரணக் குறைமொழியை எடுத்து அதற்கு நிறைமொழியாகும் ஆற்றலைத் தருகின்றனர். அவர்கள் ஆணையால் அம் மொழி நிறைமொழியாயிற்று. சொல்லின் பொருள் என்று மட்டும் கண்டால், 'சிவனுக்கு வணக்கம்' என்ற பொருளத் தரும் 'நமச்சிவாய' என்ற தொடர் எவ்வாறு மந்திரமாயிற்று? நிறை மொழி மாந்தரின் ஆணையுடன் கிளக்கப்பட்மையின் அது மந்திரமாயிற்று. திருஞானசம்பந்தர் தம் தேவாரப் பதிகங்களில் பல இடங்களிலும் 'ஆன சொல் மாலை ஒதும் அடியார்கள் வானில் அரச்ாள்வர் 'ஆணை நமதே என்று கூறுவதும், அப்பரும், சுந்தரரும் இவ்வாறு கூறுவனவும் வெற்றுரையல்ல; பொருள் பொதிந்த உரைகளேயாம் என்பதை அறிதல் வேண்டும். சமய அனுபவம் பெற்றவர் கூறும் சொற்கள் மறை மொழியாகக் காரணம், இச் சொற்கள் நிறைமொழிமாந்தரின் ஆணையுடன் வெளிவந்தவை என்பதனாலேயேயாம். இந்த நிறைமொழி பேசும் அடியார்களைப் புரிந்து கொள்வது என்பது என்றுமே கடினமான செயல்தான். காரைக்கால் அம்மையார் பேய் வடிவு வேண்டிப் பெற்றுக் கயிலையை நோக்கிச் செல்வதைக் கண்ட மக்கள் தங்களுக்குள் பேசிக்கொள்வதாகச் சேக்கிழார் கூறுவது இதனை வலியுறுத்தும். 'கண்டவர் வியப்புற்றஞ்சிக் கையகன் றோடுவார்கள் கொண்டதோர் வேடந்தன்னை உள்ளவா கூறக் கேட்டே அண்டர் நாயகனார் என்னை அறிவரேல் அறியா வாய்மை எண்டிசை மாக்களுக்கு யான் எவ்வுரு வாயின்என் என்பார்' என்ற பாடலிலிருந்து ஊர் மக்கள் அவரை எள்ளி நகையாடினார் கள் என்பது தெரிகிறது. அமைச்சர் பதவியைத் துறந்து ஊர் ஊராகத் திரியும் மணிவாசகனாரை ஊரார் பைத்தியம் என்று ஏசினார்கள் என்றும் அவரே திருவாசகத்தில், i - * - * * - * * - * - - - - * * * * * * * * * * * 参鼎彝亨 நாடவர் நந்தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப நாமும் அவர் தம்மிைஆர்ப்பிஆர்ப்ப.' என்றும்
பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/267
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை