பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 0 பெரியபுராணம் - ஓர் ஆய்வு 'பித்தன் என்று எனை உலகவர் பகர்வதோர் காரணம் இது கேளிர்' 8 'பித்தன் இவன் எனஎன்னை ஆக்குவித்து 9. ‘....... எனை மத்தோன் மத்தனாக்கி " என்றும் பேசுவதைக் காணலாம். ஆனால் உண்மை அடியாராக அல்லது தொண்டராக ஒருவர் இருப்பின் உலகத்தார் கண்ணுக்கு அது வேறு விதமாகத்தரன் படும். இத்தகைய ஒரு நிலையில்தான் ஒருவன் மான அவமானங் களைச் சட்டை செய்யாத சமநிலை ஏற்படும். இதனையும் 'சகம் பேயென்று தம்மைச் சிரிப்ப நானது ஒழிந்து நாடவர் பழித்துரை பூணதுவாகக் கோணுதலின்றிச் சதுரிழந்து அறிமால் கொண்டு..... i 1 என்று பேசுகிறது திருவாசகம். அடியார்களை உலகம் என்றும் அறிந்துகொண்டதில்லை இவ்வாறு நிகழ்வதற்கு முக்கியமான காரணம் உலகமக்கள் மதிப்பீடும் (Values) இந்த அடியவர்கள் மதிப்பீடும் முற்றிலும் முரண்பட்டிருப்பதேயாம். இன்றும், என்றுமே மக்கள் சமயவாதியை அவன் செயல்களாலும் புற வேடங்களாலும் மட்டுமே கணிக்கின்றனர். மனிதனுடைய வாழ்க்கையில் உள்ள பல்வேறு அக்கறைகளில் சமயம் என்பதும் ஒரு பகுதியாகும் என்று நினைக்கின்றவர்கள் உலகியல் மக்கள். இதன் எதிராகச் சமயம் என்பதே வாழ்க்கையின் உயிர்நாடி, அதுவே எல்லாம்; அதன் எதிரே வாழ்க்கை, குடும்பம், மனைவி, மக்கள், செல்வம், உயிர் ஆகிய அனைத்தும் பலியிடப்படக்கூடிய இரண்டாந்தர மான பொருள்கள் என்று நினைக்கும் அடியார்களை இந்த உலகம் என்றுமே ஏற்றுக்கொண்டதில்லை. ஒரு படி மேலே சென்று அவர்களைப் பைத்தியக்காரர்கள் என்றே கூறி வந்துள்ளது. உலகியல் வாழ்க்கையில் ஈடுபட்டு அதில் ஒரு பகுதி யாகச் சமயச் சடங்குகளை மட்டும் மேற்கொள்பவர்கள், சமயமே தம்முடைய எல்லாமும் என்று நினைக்கின்றவர்களைத் தம் இனத்தில் ஏற்றுக் கொள்ளாததில் வியப்பில்லை. உண்மை யான சமய அனுபவம் பெற்றவர்கள் நிறுவப்பெற்ற சமய sul l-ġgusir (Established Religion) Subsoudés GLGLILIG);### கொண்டு நிற்றல் இயலாத காரியம்.