2 4 3 'இன்பமும், பொருளும், அறனும் என்றாங்கு அன்பொடு புணர்ந்த ஐந்தினை மருங்கு..... ' என்று கூறியுள்ளமைக்கு வடவர் கூறிய நான்கு புருஷார்த்தங் களில் மூன்றைக் குறிக்கும் எனப் பொருள் செய்வாரும் உளர். உயிர்களின் தலையாய நோக்கம் இன்பம் ஆதலின் அதனை முற் கூறி மக்கள் பெறும் இன்பம்(இல்வாழ்க்கை, கொடை முதலிய வற்றால் வரும் இன்பம் அனைத்தும்) பொருளையே அடிப்படை யாகக் கொண்டு வருதலின் அடுத்துப் பொருளைக் கூறினார். உயிர்களின் தேட்டை, இன்பம், பொருள் என்பவற்றில் மிகுதி யாக இருத்தலின் இவை இரண்டுமே அறத்தின் அடிப்படையில் தான் அமையவேண்டும் என்பதைக் கூறத் தொடங்கியவர் அறத்தை மூன்றாவதாக வைத்தார். 'அறத்தான் வருவதே இன்பம்" என்ற குறளும் இந்த நுணுக்கத்தைப் புரிந்தே பேசுகிறது. அறம், அனைத்துக்கும் ஆணி வேராய் அமைந்துள்ளது. தூய மனத்தில் மாசு படாதிருத்தலே அறம்' என்பதையுங் குறள் கூறிவிட்டது. எனவே தொல்காப்பியரின் இந்த நூற்பாவிற்கு நச்சினார்கினியர் கூறுவது போலப் பொருள் கொள்ளவேண்டிய தேவை இல்லை. அவர்கள் கூறும் புருஷார்த்தமாயின் அதில் உள்ள மோட்சம் இங்குக் கூறப்படவில்லை என்பதால் நச்சினார்க் கினியர் புறத்தினையில் நிலையாமை பற்றிக் கூறும் காஞ்சியை வைத்துக்கொண்டு மூன்றை இங்கே கூறி வீடுபேற்றை முன்னர்க் கூறினார் என்று உரை இடுகிறார். '" மூவர் முதலிகள் அறம் பற்றி அதிகமாகவும், அறம்பொருள் இன்பம் வீடுபற்றி ஒரிடத்திலும்(1-53-6) குறித்துச் செல்கின்றனர். சேக்கிழாரும் இவற்றைப்பற்றிப் பேச வில்லை. காரணம் இவர் கள் அறம் என்பதைத் தனியே நினைக்க வில்லை. மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்' ' என்பதே இவர்கள் அறம் பற்றிய கொள்கையாகும். அறம் வாழ்வுடன் கலந்ததாக இருத் தல் வேண்டும். பொருள் என்பது மனிதன் புற வாழ்க்கையில் தேடி, அக வாழ்க்கையில் இன்பம் பெறக் கருவியாகப் பயன் படுத்த வேண்டிய ஒன்றாகும். அதனால் பொருள் தேடல், இன் பம் துய்த்தல் என்ற இரண்டிலுமே அறம் இரண்டறக் கலக்க வேண்டும் என்று தமிழர் கருதினர். 'அறத்தான் வருவதே இன் பம்' என்று குறள் கூறும் பொழுதே அறக் கலப்பில்லாத இன் பம் இன்பமேயன்று என்ற முடிவை ஏற்றுப் பேசுகிறது. கழிஇய காதலர் ஆயினும் சான்றோர் பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார்' என்பது அகநானூறு 2 i.
பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/271
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை