244 பெரியபுராணம்- ஓர் ஆய்வு அதனாலேயே பெரியபுராணத்துட் காணப்பெறும் அடியார் கள் வாழ்க்கை பிறருக்கு வியப்பை உண்டாக்குகிறது. இத் தமிழ்ப் பண்பாட்டை அறிந்தவர்ர்கட்கு மட்டுமே அவ் வாழ்கையின் அடிப்படையும் நுணுக்கமும் விளங்கும். இந்த அடியார்கள் தம் வாழ்க்கையில் வைதிக வழியையோ, ஆகம வழியையோ பின் பற்றியதாகவும் தெரியவில்லை. நால்வகை வருணத்திற்குப் பதிலாக நாற்பது வகைச் சாதிகள் இந்த அடியார்கள் காலத்தில் இருந்தனவாகவே தெரிகின்றது. திருநாளைப் போவார் தம் முடைய இழிந்த பிறப்பை நினைந்து பெரிதும் வருந்துவதாகச் சேக்கிழார் பாடுகின்றார். அன்றைய சமுதாய நிலையில் பல்லவர்கள் வேத வழக்கொடுபட்டு நின்றமையான் இந்த வருணப் பிரிவினை, அதனை அடுத்த சாதிப் பிரிவினை என்பவை வலுப்பெற்றிருக்க வேண்டும். தொல்காப்பியனார் காலத்திலேயே இங்குப் புகுந்துவிட்ட அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற இந்தப் பிரிவினை உட்கிளைகளுடன் வளர்ந்து மூவர் முதலிகள் காலத்தே ஓங்கி நின்றது. என்றாலும் மூவரும் இதனை நினைத்ததாகவோ ஏற்றுக் கொண்டதாகவோ தெரிய வில்லை. அதே போலப் புருஷார்த்தங்கள் என்று தனியே ஒரு பகுதியை ஏற்படுத்தி அதற்கு மரியாதை கொடுத்ததாகவும் தெரிய வில்லை. அறம் என்பதற்கு இத் தமிழரும் தமிழ் மறையுங் கூறும் பொருளை எடுத்துக் கொண்டால் புருஷார்த்தம் என்பது அடி பட்டுப் போகும். தொண்டு என்பதையே குறிக்கோளாகக் கொண்ட இவர்கள் அன்பே வடிவான சிவபெருமானை ஏற்றுக் கொண்டமையின் இவர்கள்செயல்கள் அனைத்தும் அறச் செயல்கள் என்றே கருதப் பெற்றன. எறிபத்தர், இயற்பகையார், கோட்புலியார், சிறுத் தொண்டர் முதலானோர் செய்த செயல்களைக் கொலை என்று கூறுவதா? உலகில் தோன்றிய பல சமயங்களில் தோன்றிய பல அடியார்கள் இத்தகைய செயல்களைச் செய்துள்ளனர். அவர் களை யாரும் குறை கூறியதில்லை என்பதையும் மனங் கொள்ள வேண்டும். எனவேதான் இவர்களைச் செயற்கருஞ் செய்கை செய்தவர்கள் என்று கூறுகிறோம். எந்த ஒருவரையும் அவர் செய்த செயலைமட்டும் வைத்துக் கொண்டு முடிவு செய்வது தவறாகும். எனவே அடியார்கள் ஒருவகைக் குறிகோளுக் காகவோ அல்லது தொண்டிற்காகவோ தம் உடல், பொருள், ஆவி அனைத்தையும் ஒரே வினாடியில் தரக்கூடியவர்கள் என் பதை மனங்கொள்ள வேண்டும்.
பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/272
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை