அடியார்கள் யார்? 245 பக்தி என்றால் என்ன? இந்த அடியார்கள், பக்தர்கள் என்பவர்களை மேனாட்டார் மிஸ்டிக்ஸ்(Mystics) என்று கூறுவர். நவீன மனவியல், ஆய்வாளர் இவர்கள்பற்றிக் கூறுவனவற்றைத் தொகுத்துக் காண்டல் பயனுடையதாகும். 'பக்தி என்பது, தான் இறைவன் என்ற இரண்டிலும் ஒர் ஒருமை ஏற்பட்டதாக, உணர்கின்ற உணர்வேயாம். எனவே அது உண்மைச் சமயத்தின் உயிர் நாடியாகும். சமய வாழ்வு என்பதன் உள்ளிடும், வடிவும் அதுவாகும்.' 'இறைப்பொருளைப் பற்றிக்கொள்ள வேண்டும் என்று மனித மனம் முயல்கின்ற முயற்சியே பக்தியாகும். அப்பரம் பொருளைப் பற்றி நின்று அதனுடன் இரண்டறக் கலந்து அனுபவிக்க நினைப்பதே பக்தி, இவற்றுள் முதலாவது பக்தியின் தத்துவம். இரண்டாவது சமய அனுபவத்தின் ஒரு கூறாகும். இந்நிலையில் கடவுள் §§ தத்துவப் பொருளாக இராமல் அனுபவ மாக மாறிவிடுகிறது. 'பக்தி என்பது சமய வாழ்வின் சாரமாகவும் தனிப்பட்ட பக்தியாகவும் உள்ளது. வேறு எல்லாவித உறவுகளையும் மனமானது மறந்து விட்டு ஆன்மாவுக்கும் இறைவனுக்கும் உள்ள உறவு ஒன்றை மட்டுமே விரும்புவதாகும்.' இப்பெருமக்களுக்குக் கடவுள் என்பது தனியே எங்கோ விண்வெளியில் இருக்கும் பொருளன்று. கடவுள், என்றும் எப் பொழுதும் இவர்களின் உள்ளேயே உறைகிறான். இக் கருத்தை இயேசுவின் வாழ்க்கை என்று தாம் எழுதிய நூலில் கோகுல் என்பார் பின்வருமாறு கூறுகிறார். 'இயேசுவின் வாழ்க்கையில் வேறு எங்கும் காணப் பெறாத தனித்துவம் யாதெனில் இறைவனுடைய சன்னி தானத்திலேயே தாம் இருப்பதாக அவர் உணர்ந்ததேயாம். வாழ்வு முழுவதும் இறைத்தொடர்புகொண்டே வாழ்ந்தார். அவரைப் பொறுத்தமட்டில் இறைப் பொருள் ஏதோ ஒரு கருத்துப் பொருளாய் இராமல் அன்றாடம் வாழ்வுடன் தொடர்புகொண்ட உள்பொரு ளாகவே இருந்தது. இறைப் பொருள் மனத்தினால் எண்ணப்படுவதாகவோ, கற்பனையில் காண்பதாகவோ இல்லாமல் அனுபவப் பொருளாகவே இருந்தது.'
பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/273
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை