18 அடியார்கள் யார்? 2.47 பளிச்சிடும் சிலவற்றைப் பொள்ளெனத் தோன்றும் ஒளி என்கிறார்', ' எந்த ஒரு செயலையும் தாங்களாகவே, தங்கள் அறிவு, கருவி கரணங்கள் என்பவற்றின் உதவியால் செய்வதாக இவர்கள் கருதுவதில்லை. எதனைச் செய்ய நேர்ந்தாலும் உள்ளுணர்வின் துண்டுதலால் தற்போதம் இல்லாமல் செய்தால் அதனை இறைவன் செயலாகவே கருதினார்கள். இவர்களை நன்கு அறிந்த உலகினரும் இவர்கள் செய்த செயலுக்கு இவர்களைப் பொறுப்பாக்குவதில்லை. சித்தம் சிவமாக்கிச் செய்தனவே தவமாக்கும் அத்தன் என்பதும் மணிவாசகம். அப்படியானால் சித்தப்பிரமை பிடித்தவர்கட்கும் இவர்கட்கும் வேறு பாடில்லையா? உண்டு. சித்தஸ்வாதீனம் இல்லாதவர்கட்குப் பொறி புலன்கள் கட்டுப்படுவதில்லை. அவை இருப்பதாகவோ அவற்றை அடிக்கி ஆளவோ, அவர்கள் அறியார், ஆனால் இந்தப் பக்தர்களின் பொறி புலன்கள் நல்ல கூர்மையான நிலையில் இருக்கும். நமக்கும் இவை கூர்மையாக இருப்பினும் இவற்றை அடக்கி ஆள வழி துறை தெரிவதில்லை. அவை போன வழி நாம் போகிறோம். பக்தர்களைப் பொறுத்தமட்டில் நிலைமையே வேறு. கூர்மையான அவர்களின் பொறி புலன்கள் அவர்கள் ஆணைக்குக் கட்டுப்பட்டிருப்பவை. எவற்றைச் செய்ய வேண்டும் என்று அவர்கள் உள்ளுணர்வு தூண்டுகிறதோ அவற்றைச் செய்ய அவர்கள் முற்படும் பொழுது இப்பொறி புலன் கள் அவர்கள் ஆணை வழி நிற்கும். இவ்வாறு இல்லாமல் என்றாவது இவர்கள் இறைவன் திருவுளக் குறிப்பு அல்லது அவன் அருள் இல்லாமல் எதனையாவது செய்யத் தொடங்கினால் அச்செயல் பயனற்றுப் போய்விடும். இது தான் நாவரசரைப் பொறுத்தமட்டில் நடைபெறக் காண்கிறோம். வசதியான குடும்பத்தில் பிறந்தவர் இப்பெரியார். இவர் கல்வி பயிலத் தொடங்கியதைச் சேக்கிழார் மிக அழகாகப் பேசு கிறார். பொருணித்தங் கொளவீசிப் புலன் கொளுவ மணமுகிழ்த்த கருணிக்கி மலர்விக்கும் கலை பயிலத் தொடங்கு வித்தார். ' கலை என்ன செய்யவேண்டும் என்பதைக் கவிஞர் அழகாக விரிக்கின்றார். புலன்களைப் பற்றிக்கொண்டு விடாப்பிடியாக மூடி இருக்கும் இயல்புடையது மனம். அந்த மனத்தில் புலன் கொளு வியதால் உண்ட்ான சுருளைப் போக்கி மனத்தை விரிந்து
பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/275
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை