பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடியார்கள் யார்? 2.49 அனுபவிக்கத்தான் முடியும். கடவுட் கொள்கையை ஏற்றுக் கொள்ளாத சமணம், பெளத்தம் என்பவைகள்கூட தியானத்தை வலியுறுத்துகின்றன. எனவே சமயத்தை அறிதல், உணர்தல் என இரு வகையில் விளங்கிக்கொள்ளவேண்டும். நாவரசப் பெருமான் எல்லாச் சமயங்களின் தத்துவங்களையும் அறிவின் துணை கொண்டு ஆய்ந்தும் அனுபவித்தும் அவற்றால் தம் மனத்தில் அமைதி கிட்டுகிறதா எனக் காண முயன்றார். இவை இரண்டுமே ஒரு தனிமனிதன் தன் முயற்சியால் செய்யக்கூடியவை. இவற்றில் பயன் காண்பதும் காணாமற்போவதும் அவனவன் நெஞ்சுறுதி, முயற்சி என்பவற்றின் அடிப்படையில் கிட்டுபவை என்றாலும் இவை அனைத்துக்கும் அப்பால் ஒன்று உண்டு என இத் தமிழர் கருதினர். இம் முயற்சியால் கிடைக்கும் அறிவுத் தெளிவும் அனுபவமும் அமைதியைத் தந்துவிடும் எனக் கூறுவதிற்கில்லை. அந்த அமைதி கிட்டவேண்டுமானால் இறையருள் வேண்டும்என இந்நாட்டவர் கருதினர். நம் காலத்தில் வாழ்ந்த கவியரசர் பாரதியார் ஒர் ஒப்பற்ற பக்தராயிற்றே! புதுவையில் குள்ளச் சாமி, மாங்கொட்டைச் சாமி என்ற சித்தர்களுடன் உறவு கொண்டு அவர்களால் உபதேசிக்கப்பெற்று ஆன்மீக முறையில் மிக உயர்ந்த நிலையை அடைந்தவர் பாரதியார். இன்று அவர் பற்றியும் அவர் நூல்கள் பற்றியும் பேசும் பலரும் அவருடைய ன்மீக வளர்ச்சியை அறிய முற்படுவதில்லை; பேசுவதும் ல்லை. அப்பெருமகனார் இத் தத்துவ ஞானம் எந்த உதவியும் செய்வதில்லை என்ற கருத்தை, 'பலகற்றும் பல கேட்டும் எங்கள் முத்துமாரியம்மா! எங்கள் முத்துமாரி பயன்ஒன்றும் இல்லையடி முத்து மாரியம்மா என்றும், 'தோல் வெளுக்கச் சாம்பலுண்டு, துணி வெளுக்க மண்ணுண்டு; மணி வெளுக்கச் சாணையுண்டு: ஆனால் மனம் வெளுக்க வழி இலையே' ' என்றும் பாடுதல் அறிதற்குரியது. அந்த அருள் இல்வழி இந்த அனுபவம் முற்றுப்பெறுவதில்லை. இதனைத்தான் கவிஞர் 'நல்லாறு தெரிந்து உணர்ந்தும் நம்பர் அருளாமையினால் அமண் சமயம் குறுகினார்' என்று கூறுகிறார். பல்வேறு சமயங்களின் தத்துவ, அனுபவங்களை ஆய்ந்த நாவரசர் ஏன் சமணத்தில் சென்று சேர வேண்டும்? பெளத்த ராகவோ, அல்லது வேறு எந்தச் சமயத்தவராகவோ ஆகியிருக்