பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.54 பெரியபுராணம் - ஓர் ஆய்வு ஒரு சமயத்தைச் சேர்ந்தவர் அனைவரும் இச் செயலில் ஈடுபட்டனர் என்று கூறுதல் தவறாகும். ஆனால் அதே நேரத்தில் இவ்வாறு ஒன்றுமே நடைபெறவில்லை என்று கூறுவதும் வரலாற்றை மறைப்பதாகும். இந்தப் போராட்டங் காரணமாக அடியவர்கள் வரலாற்றை மறுப்பதில் பயனில்லை. சமணம் உட்பட எல்லாச் சமயங்களிலும் அடியவர்கள் தொண்டர்கள் இருந்திருப்பர் என்பது மறுக்கமுடியாத உண்மையாகும். நாவரசரைப் பொறுத்த மட்டில் சமண சமயம் கூறும் தத்துவங்களில் ஈடுபட்டு அச் சமயம் புகுந்தார். ஆனால் சமயம் கூறும் முறையில் அச் சமயிகள் வாழவில்லை. அரசியல் செல்வாக்கும் அதிகார வேட்டையும் சமயிகளிடம் புகுந்து விட்டன. எனவே நாவரசருக்கு இது பெரிய அதிர்ச்சியைத் தந்திருக்கவேண்டும். அடுத்து அச் சமயம் கடவுள் நம்பிக்கை இல்லாத சமயமாகும். முதலில் நாவரசர் அதுபற்றிக் கவலைப் படாமல் இருந்திருக்கவேண்டும். அதனாலேயே அவர் அங்குப் போய்ச் சேர்ந்தார். ஆனால் நாளாவட்டத்தில் இந்த நம்பிக்கை இன்மை அவரை வாட்டி இருத்தல்வேண்டும். அவருடைய பரம்பரையில் ஊறி வந்த அடிப்படையான நம்பிக்கைகள் அவ்வளவு எளிதில் அவரை விட்டுவிடவில்லை. இளமைத் துடிப்பில் அதுபற்றிக் கவலைப்படாமல் புறச் சமயம் புகுந்தார். ஆயினும் நாளாவட்டத்தில் அவருடைய குருதியில் ஊறியுள்ள கடவுள் நம்பிக்கை அவரை அழுத்தத் தொடங்கியிருத்தல் வேண்டும். நீண்டகாலம் சமணத்தில் தங்கி அவர்களுடைய நூல்கள் பலவற்றையும் கற்றுத் தேர்ந்து, பெளத்தர்களுடன் வாதிட்டு அவர்களை வென்று அதன் பயனாகத் தருமசேனர் என்ற பட்டத்தையும் பெற்றார் என்று சேக்கிழார் கூறுகிறார். இவ்வளவு நடைபெற்றும் எந்த அமைதியை நாடி அங்குச் சென்றாரோ அது கிடைத்தபாடில்லை. அவரையும் அறியாமல் தாம் செய்தது தவறோ என்ற எண்ணம் அவருடைய அக மனத்தில் இருந்துகொண்டே இருந்தது போலும் புதுமையில் பயன் இருக்கும் என்று சென்றவர்கள் பலரும் அங்கு அது இல்லை என்ற வுடன் தங்கள் பழமையே இதைவிட நலம் போலும் என்று நினைப்பதும் பழமைக்கே திரும்பிவிடுவதும் இன்றும் உலகிடைக் காணப்பெறுகின்ற ஒரு செயலாகும். மேலும் அவர் நினைத்த அஹிம்சை என்பது அச் சமயத்தில் பேச்சளவில், கொள்கை அளவில் இருந்ததே தவிரக் காரியத்தில் காட்டப்படவில்லை. அதிகாரம் கைவரப் பெற்ற எந்தச் சமயமும் கொள்கையைக் காற்றில் பறக்கவிடுவது என்பது உலகம் தோன்றிய நாளிலிருந்து