தொண்டு நெறியே சைவ நெறி 26.3 'வந்தவர் யாவராயினும் என்ற சொற்களின் ஆழத்தை இப் பொருளால்தான் விளக்க முடியும். 'நேர வந்தவர்கள் முன்பின் அறியாத எவர்களாயினும் என்பதை இரண்டாம் அடியின் முன்னர்க் கொண்டு கூட்டுச் செய்துவிட்டால் பொருள் நேராகச் செல்வதை அறிய முடியும். 'நேர வந்தவர் யாவராயினும் ஆரம் என்பு புனைந்த ஐயர்தம் அன்பர் என்பதோர் தன்மையால், நித்தமாகிய பத்தி முன்......” என்று பொருள் விளக்கங் கிடைக்கும். முன்பின் தெரியாதவர்களை எவ்வாறு விரும்பி உபசரித்தார்? இது சாதாரண மனித இயல்பு அல்லவே? என்ற வினாவை எதிர் பார்த்து முதலடியில் விடை கூறுகிறார். முன்பின் தெரியாதவராக இருப்பினும் அவர்களும் ஆரமாக எலும்பை அணிந்த சிவபிரானின் அடியவர்கள் என்று இளையான்குடியார் நினைத்த காரணத்தால் (தன்மையால்) அவர்களிடம் குளிரப் பேசி உணவுக்கு அழைத்து வந்தார். இவ்வாறு நேரிதாகப் பொருள் கொள்வதில் யாராக இருந்தாலும் சோறிட்டார்' என்ற பொருள் வருகிறது. சைவம் என்ற அடிப்படையில் நின்றாலும் பரந்து பட்டு உலகம் முழுவதையும் ஒன்றாகக் காணும் பார்வை உடையவர் சேக்கிழார். தம்முடைய சைவம், உலகம் தழுவியது என்று உறுதியாக நம்பினவராவார் அவர் அவருக்கு அடியெடுத்துத் தந்த இறைவனும் 'உலகெலாம்' என்றுதான் தொடங்கிக் காட்டினான். எனவே பசித்தவர் அனைவர்க்கும் சோறிட்டார் என்ற கருத்தைத்தான் கவிஞர் இங்குக் கூற வருகிறார் என்று கருதுவதில் தவறில்லை. முன்பின் தெரியாத புதியவர்களாக வருபவர்களை விருந்தினர் என்ற சொல்லால் இத் தமிழர் குறித்தனர். எனவே உணவிடும் தொண்டை ஏறத்தாழ 27 அடியார்கள் செய்ததாகச் சேக்கிழார் கூறுவது பொருத்தமேயாகும். நேரிடையாகச் சோறிட்டார் என்று சில புராணங்களிலும் மறைமுகமாக மனையறம் புரிந்தார் என்று சில இடங்களிலும் கூறிச்செல்வது இக் கவிஞர் இயல்பு. **, "மெய்யடியார்கட்கு ஆன பணிசெயும் விருப்பில் நின்றார்; வையகம் போற்றும் செய்கை மனையறம் புரிந்து வாழ்வார் ‘........ அடியார்க்கு என்றும் உளம்மகிழ் சிறப்பின் மல்க ஒடளித்து ஒழுகும் நாளில் I 0 1 1 என்று திருநீலகண்டர் புராணத்திலும். 19
பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/291
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை