264 பெரியபுராணம்- ஓர் ஆய்வு 'மிக்க சீர் அடியார்கள் யாரெனினும் வேண்டுவ யாவையும் இல்லை என்னாதே இக்கடற்படி நிகழமுன் கொடுக்கும் இயல்பின் நின்றவர்; உலகியல் பகையார் ' என இயற்பகையார் புராணத்திலும் 'தேடிய மாடு நீடு செல்வமும் தில்லை மன்றுள் ஆடிய பெருமான் அன்பர்க்கு ஆவன ஆகும்' 13 என மெய்ப் பொருள் நாயனார் புராணத்திலும் 'சிந்தை செய்வது சிவன்கழல் அல்லதொன் றில்லார் அந்தி வண்ணர்தம் அடியவர்க்கமுது செய்வித்து கந்தை கீளுடை கோவணம்.....உதவி ' என அமர்நீதியார் புராணத்திலும் கூறுவன காண்டற்குரியன. அரசர்க்குச் சேனாபதியாய் இருக்கும் பணி பூண்ட மானக் கஞ்சாறர் பற்றிக் கூறும்போதுகூட துணிவுடைய தொண்டர்க்கே ஏவல் செய்யும் தொழிலுடையார்' ' { - * * * * - - - - - அடியாராம் ஈறில் பெருந் திருவுடையார் உடையாரென் றியாவையு நேர் கூறுவதன் முன் அவர்தங் குறிப்பறிந்து கொடுத்தார்' " என்று கூறுகிறார். இவ்வாறு எல்லா அடியார்களும் சோறிடுதல், வேண்டுவன கொடுத்தல் என்றவற்றில் தலை நின்றார்கள் என்று கூறிவரும் கவிஞர் இடமறிந்துதான் இதனைச் சொல்கிறார். மேட்டுக்குடி மக்களைப் பற்றிக் கூறும்போது இவற்றைச் சொல்வது முறையாகும். ஆனால் நந்தனார் போன்றவர்களைப்பற்றிப் பாடும்போது இவ்வாறு கூறுதல் சிறவாது. எனவே அவர் கொடுக்கக்கூடிய நரம்பு, தோல், கோரோசனை முதலியவற்றைத் திருக்கோயில்கட்குத் தந்தார்' என்று கூறுவது சேக்கிழாரின் மெய்ம்மை கூறும் இயல்புக்கு எடுத்துக்காட்டாகும். அன்பின் வெளிப்பாடு வன்முறையில் வெளிப்படலாமா? தொண்டு என்பதைப் பரந்த பொருனில் இக் கவிஞர் பயன் படுத்துகிறார் என்று கூறப்பெற்ற தல்லவா? பிறருக்கு ஏற்படும்
பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/292
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை