தொண்டு நெறியே சைவ நெறி 26 5 இன்னல் களைவதும் தொண்டு என்றே கூறப்பெறும். அரந்தை தீர்க்கும் அடியவர்' ' என்று திருக்கூட்டச்சிறப்பில் கூறியதை நினைவிற் கொள்ளவேண்டும் கருவூரில் புகழ்ச் சோழர் அரசாள்கின்ற காலம்; அவருடைய பட்டத்து யானை குளித்து மீள்கையில் மதங்கொண்டது. சிவகாமி ஆண்டார் என்ற முதியவர் இறைவனுக்குச் சாத்த நந்தவனத்திலிருந்து மலர் பறித்துக் குடலையில் நிரப்பிக்கொண்டு தெருவழியே வரும் பொழுது அரசனுடைய பட்டத்து யானை அக் குடலையைப் பிடுங்கிக் காலில் துவைத்துவிட்டது. முதியவர் அழுகிறார். இந் நிலையில் அன்பர்கட்குத் தொண்டு செய்வதையே கடமையாகக் கொண்ட எறிபத்தர் வருகிறார். எறிபத்தரை அறிமுகஞ் செய் கிறார் கவிஞர்: 'மல்லல் நீர் ஞாலந்தன்னுள் மழவிடை உடையான்அன்பர்க்கு ஒல்லைவந் துற்ற செய்கை உற்றிடத் துதவும் நீரார்' 1 9 இருட்கடு ஒடுங்கு கண்டத்து இறையவற் குரிமை பூண்டார்க்கு அருட் பெருந்தொண்டு செய்வார் அவர் எறிபத்தராவார்' " அழலவிர் சடையான் அன்பர்க்கு அடாதன அடுத்த போது முழையரி என்னத் தோன்றி முரண்கெட எறிந்து தீர்க்கும் பழமறை பரசும் தூய பரசுமுன் எடுக்கப் பெற்றார் என்று, திருக்கூட்டச் சிறப்பில் 'கைத்திருத்தொண்டு செய்கடப் பாட்டி னார்' ' என்று கூறியதை விளக்குமுறையில் உணவூட்டும் தொண்டர்களைப் போல் கையினால் நேரிடையாகத் தொண்டு செய்யும் ஒருவரை அறிமுகஞ் செய்கிறார். உதவிக்கு வருகிறவர்கள் தேவையான நேரத்தில் வந்தாலொழிய அந்த உதவி பயனற்றதாய்விடும். ஆபத்து ஏற்படும் காலங்களில் இது மிகமிக முக்கியம். எனவேதான் தொடக்கத்திலேயே "உற்றவிடத்து உதவும் நீரார்' என்று கூறுகிறார் கவிஞர். அடுத்து அவர் செய்வதை அருட் பெருந்தொண்டு என்பார். இவ்வாறு ஒரு வகை உண்டா? என்றால் உண்டு என்றுதான் கூறவேண்டும். தொண்டு என்று கூறினவுடன் நம்மினும் தாழ்ந்தவர்கள் வேறு பயன் கருதாமல் நமக்குச் செய்யும் பணிவிடைகளைத்தான் நாம் கருதுகிறோம். ஆனால் ஒருவனுக்கு உறுதுணையாக இருந்து தேவை ஏற்படும்பொழுது அவனுடைய பகையை அழிக்கும் கடுமையான செயலைச் செய்பவர்களைத் தொண்டர் என்று
பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/293
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை