பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 6 பெரியபுராணம்- ஓர் ஆய்வு கூறும் பழக்கம் இல்லை. பகையைக் கொல்பவர்களை வேறு எந்தச் சொல்லால் குறிப்பிட்டாலும் தொண்டர் என்ற சொல்லால் குறிப்பிடமாட்டோம். காரணம் அவர் செயல் கொலைத் தெர்ழிலாகும். ஆனால் கொலைத் தொழில் செய்பவர் களைத் தொண்டர் என்றுமட்டும் கூறாமல் அருள் தொண்டர் என்று கவிஞர் ஏன் கூற வேன்டும்? இவ்வாறு கூற இரண்டு காரணங்கள் உள. கொலைத் தொழில் செய்பவர் மனத்தில் பழிவாங்கும் பகைமை, வெறுப்பு, காழ்ப்பு முதலிய உணர்வுகள் தாம் விஞ்சிநிற்கும். இவ்வாறு இல்லாமல் அறுவைமருத்துவம் செய்பவர் அறுவை மருத்துவர் எனப்படுவார். அவர்கள் செயல் நோயாளனின் சாவில் முடிந்தாலும் யாரும் மருத்துவரைக் குறை கூறுவதில்லை. எறிபத்தர் அழித்தல் தொழிலில் பகைமை முதலிய எந்த உணர்வும் இல்லை. காரணம் அவர் தம் பொருட்டாக எதனையும் செய்யவில்லை. கொலைத் தொழிலில் ஈடுபடும்போது கூட "ஐயோ பாவம்! இதனைச் செய்ய வேண்டியுள்ளதே!' என்று கருதி அவ் உயிர்கள்மாட்டு அருள் உள்ளங் கொண்டுதான் தண்டனை வழங்குகிறார். நடைபெறுவது கொலையாக இருக்கலாம். ஆனால் அதனைச் செய்பவர் மனத்தில் இருப்பது அருள்தான். 'அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார் மறத்திற் கும் அஃதே துணை' என்ற குறள் இங்கு நினைவு கூர்தற்குரியது. எறிபத்தர் செய்கையில் அன்பு தொண்டு வெளிப்படுகிறதா? இனித் தொடர்பிலார்மாட்டும் கொண்ட அருளால்தான் அவர்கள் உதவிக்கும் போகிறார். எனவேதான் கவிஞர் அவர் செயலை 'அருள் தொண்டு' என்று கூறுகிறார். தொண்டர்கள் கொலைக் கருவிகளைத் தாங்கி உலவலாமா என்ற வினாவுக்கு விடையளிப்பார்போலக் கவிஞர், - - - - - - -- * * * * - - - மன்னிய சைவம் ஓங்க..... - அன்பர்க்கு அடாதன அடுத்தபோது.... முரண்கெட எறிந்து தீர்க்கும் தூய பரசு முன் எடுக்கப் பெற்றார். ' என்று பாடுகிறார். பழமறை பரசும் தூய பரசு என்பதனால் இது சிவபெருமான் கையில் உள்ளது போன்றதும் கொடுமை செய்யாததும் ஆகிய கருவி என்றும், அன்பர்கட்கு அடாதன அடுத்தபோது அந்த அடாத செயலை விலக்குதற்காகவே எடுக்கப்பெற்ற கருவி