தொண்டு நெறியே சைவ நெறி 26 9 இப்பொழுது எறிபத்தர் நினைக்கின்றார். 'வன்பெரும் களிறும் பாகர் மடியவும் உடைவாள்தந்து என்பெரும் பிழையினாலே என்னையுங் கொல்லும் என்னும் அன்பனார் தமக்குத் தீங்கு நினைந்தனன் ' அவருக்குத் தீங்கிழைத்து விட்டோமே என்ற வருத்தத்தில் எறிபத்தர் மன்னனின் வாளைத் தன் கழுத்தில் பூட்டி அரியத் தொடங்கினார். இதனைச் சற்றும் எதிர்பாராத மன்னன் திடுக்கிட்டு, 'பெரியோர் செய்கை இருந்தவாறு இது என்? கெட்டேன் என்று எறிபத்தர் கையைப் பிடித்துத் தடுக்கவும், அவர் விடாது அரியவும், நடந்த இந்தப் போராட்டத்தைக் கவிஞர் 'அளவிலாப் பரிவால் வந்த இடுக்கண்' என்று கூறுகிறார். இந்த வரலாற்றை இவ்வளவு விரிவாகக் கூறியதன் நோக்கம் சேக்கிழார் கண்ட சைவத்தைப்பற்றி அறியவேயாம். திருஞான சம்பந்தர் போன்ற அவதார நாயகர்கள், திருநீலகண்டர், இளையான்குடிமாறர் போன்ற சாதாரண மக்கள் என்பார் அனைவரும் எத்தகைய சமயப் பிடிப்புடையவராய் இருந்தனர்? அவர்கள் தொண்டுள்ளம் எத்தகையதாக இருந்தது? என்பதனைக் காட்டவந்த கவிஞர் நாட்டை ஆளும் மன்னர்கள் எத்தகைய மனநிலை உடையவர்களாய் இருந்தனர் என்பதையும் இரண்டு மன்னர் வரலாறுகளில் வைத்துக் காட்டுகிறார். ஒரு பேரரசனுடைய பட்டத்து யானை அவனுடைய தலை நகரிலேயே கொல்லப்பட்டுவிட்டது. பகைவரும் செய்ய முடியாத செயல் நடைபெற்றுவிட்டது எனக் கேள்விப்படுகிறான் மன்னன்; நின்று பேச நேரமில்லை; 'செற்றனர் சிலராம்' என்றமையால் பகைவர் என்ற முடிவுக்கு வந்த்தில் தவறே இல்லை. யானை பட்டகளத்திலும் வென்றவர் யாவர்? என்ற வினா பன்மையில் எழுந்தது அவன் மனநிலையை நன்கு படம் பிடித்துத் காட்டு கிறது. அங்கு நின்றவர்கள் 'உன் யானையை வெல்லும் பகை மன்னர் யார் உளர்? தீங்கு செய்தவர் இவர்தான் என்று அடியாரைக் காட்டினவுடன் 'பிழைபடின் அன்றிக் கொல்லார்’ என்ற முடிவுக்கு உடனே வருகிறானல்லவா? அரசனுடைய பட்டத்து யானை அவனுடைய தலை நகரிலேயே கொல்லப் படுதல் அவனுக்குப் பெருத்த அவமானத்தைத் தரக்கூடியது அல்லவா? என்றாலும் 'அடியார் பிழைபடின் அன்றிக் கொல்லார்' என்று அவருடைய கட்சி என்ன என்று விசாரிப்பதற்கு முன்னரே முடிவுக்கு வருகிறான் என்றால் சிவனடியார்களைப்பற்றி அவன்
பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/297
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை