27 0 பெரியபுராணம்- ஓர் ஆய்வு கொண்டிருந்த அசைக்கமுடியாத நம்பிக்கை எத்தகையது என வியக்கவேண்டியுளது. இக் காட்சியைக் கவிஞர் கூறும் முறையில் எறிபத்தரும் மன்னனும் ஒருவரை ஒருவர் முன்னரே அறிந்தவர் களாகவும் தெரியவில்லை. அப்படியானால் அரசன் இந்த முடிவுக்கு வர உதவியது எது? அடியாரை இவர்தான் என்று காட்டியவுடன் 'அன்பராம் குணத்தின் மிக்கார்' என்று அரசன் கூறியது எதுகொண்டு? அரசனுடைய பட்டத்து யானை பூவைச் சிந்திவிட்டது என்ற அற்பக் குற்றத்துக்காகக் கொன்றவர் அதனுடைய ஆழத்தை அறிந்தவுடன் ஒடித் தப்பிக்க முயலாமல் அரசன் வந்தும் ஒரு சிறிதும் கவலையின்றி எதிரே நிற்கின்றார் என்றால், அவர் குணத்தின் மிக்கவராகத்தான் இருத்தல்வேண்டும் என்ற முடிவுக்கு அறிவின் மேம்பட்ட அரசன் வருகிறான். அந்த மன்னனும் தன் யானை இறந்ததால் சினங் கொள்ளாமல், ஆத்திரப்படாமல் சிவனடியார் தவறு செய்யமாட்டார் என்று கருத வேண்டுமேயாயின் அவனும் ஒரு சிவனடியானாகத்தான் இருத்தல்வேண்டும். 'கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்' என்று அடியார்கட்குக் கூறிய இலக்கணத்தில் வழுவாதவனாக மன்னன் இருந்தமையால்தான் பொருள் நஷ்டம் மானக்கேடு என்ற எதைப் பற்றியும் கவலைப்படாமல் அடியார் பிழை செய்யார் என்ற முடிவுக்கு வருகிறான். அடுத்து, அடியார் நடந்தது என்ன என்று விவரமாகக் கூறுகிறார். அவரைப் பொறுத்தமட்டில் இறைவனுக்குரிய மலரைச் சிந்துவது பாவமாயினும் அரசனைப் பொறுத்த மட்டில் அது சாதாரணக் குற்றமேயாகும். அவ்வளவு அற்பமான குற்றத்திற்குப் பொருத்தமில்லாததும், பகுத்தறிவுக்கு ஒவ்வாததும், உணர்ச்சி வசப்பட்டுச் செய்யப்பட்டதுமான தண்டனை வழங்கப்பெற்றுவிட்டது. அதுவும் நீதி வழங்கும் நடுவணர் இத் தண்டனையை வழங்கவில்லை. ஒரு குடிமகன் நடுவணர் செய்யும் பணியைத் தாமே மேற்கொண்டுவிட்டார். என்றாலும் அந்த மன்னன் தன் பொறுப்பின்கீழ் உள்ள யானை யும், பாகரும் இழைத்த தவற்றுக்குத் தானும் பொறுப்பு என்று சொல்வதுடன் நில்லாமல் தன் வாளையே அவர் கையில் தந்து தன்னைத் தண்டிக்குமாறும் வேண்டுகிறான். இந்த வினாடிவரைத் தாம் செய்தது முற்றிலும் சரியான செயல் என்று நினைத்திருந்த எறிபத்தர்க்குத் தன் எதிரே நிற்கும்
பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/298
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை