பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/300

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27.2 பெரியபுராணம்- ஓர் ஆய்வு சேக்கிழார் கண்ட சைவத்தில் மனிதர்கள் மனிதர்களாகவே மதிக்கப்படுதலும் தொண்டு மிகச் சிறந்த சிறப்பைப் பெறுதலும் காண முடிகிறது. சிவனடியார்கள் பிழைசெய்ய மாட்டார்கள்; தன்னலமின்மையால் அவர்கள் செயல்களைக் கவனத்துடன் எடை போட வேண்டும் சிவனடியார்கள் குற்றஞ் செய்யமாட்டார்கள் எனவே அவர் கள் வருந்தும்படி செய்தால் தாம் அதற்குத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்ற உறுதியான கொள்கை உடையவர் ஆகலின் இம்மன்னர் இறுதியில் தம் பணியாளர் செய்த தவறு களுக்காக உயிர் துறக்கும் நிலை ஏற்பட்டது. எறிபத்தர் பணி முடிந்தவுடன் அதிகன் என்பவனுடன் போர் தொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அரசன் தான் செல்லாமல் அமைச்சனை அனுப்பினான். அந்த அமைச்சனும் அவனுடன் சென்ற வீரர்களும் அதியனைப் போரில் வென்று பல செல்வங்களையும் மகளிரையும் அக்கால வழக்கப்படிக் கொணர்ந்தனர். படைஞர், இறந்தவர் தலைகளையும் கொணர்ந்தனர். அத்தலைகளைப் பார்த்துக் கொண்டு வந்த புகழ்ச் சோழர் அத் தலைகளுள் திரு நீறு பூசிய சடையுடைய தலை ஒன்று இருக்கக் கண்டார். உடனே துடிதுடித்துப் போய் 'திரை சரித்த கடலுலகில்திருநீற்றின் நெறி புரந்து யான் அரசளித்த படிசால அழகிது என அழிந்து அயர்வார் இவ்வயர்வு தன் பணியாளன் செய்த குற்றத்திற்குத் தானே Glumpitul 4 argirl igarrraprGib{Vicarious Liability). 'தார்தாங்கிக் கடன் முடித்த சடைதாங்குந் திருமுடியார் நீர் தாங்கும் சடைப்பெருமான் நெறிதாங் கண்டவரானார். சீர்தாங்கும் இவர் வேனிச் சிரந்தாங்கி வரக்கண்டும் பார்தாங்க இருந்தேனோ பழி தாங்குவேன்' என்றார்" போர் என்றாலும் அது வரன்முறையுடன் செய்யப்பட வேண்டும் என்ற கருத்தில் "ஆவும், ஆனியல் பார்ப்பனமாக்களும் தென்புல வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும் பொன்போல் புதல்வர்ப் பெறாஅதீரும், பெண்டிரும் பிணியுடையீரும், எம் அம்பு கடி விடுதும் நும் அரண்சேர்மின்' 'என்று முன்னெச்சரிக்கை விடுத்துப் போர் புரியும் மரபுடையவர் இத் தமிழர். சாதாரண மக்களையே பாதுகாவலான இடம் சேர்க' என்று கூறும் அரச மரபில் வந்த ஓர் அடியார், அரசராக இருந்தது இடைப்பிறவர