தொண்டு நெறியே சைவ நெறி 273 லாகும்.சிவனடியார் தலையைத் தம் படைஞர் வெட்டிக் கொணர்ந்ததைக் கண்டால் என்ன பாடுபவார் என்று கூறத் தேவை இல்லை. அறிந்தோ அறியாமலோ தன்னாலோ தன் பரிசனத்தாலோ சிவனடியார்க்குத் தீங்கு விளைந்தது என்றால் மற்றோர் அடியார், அவர் அரசராக இருப்பினும் சரி, உயிர் வாழ மாட்டார். புகழ்ச் சோழரும் அந்தத் தலையை ஏந்திக் கொண்டு தீக்குளித்தார் என்கிறார் சேக்கிழார். சேக்கிழார், தம் பெரிய புராணத்துள் சேரமான்பெருமாள் என்ற சேரரையும், கோச்செங்கணான், புகழ்ச் சோழர் என்ற இருசோழரையும், நின்றசீர் நெடுமாறன் என்ற பாண்டியன் ஒருவனையும், ஐயடிகள் காடவர்கோன், கழற் சிங்கர் என்ற பல்லவர் இருவரையும், கூற்றுவர் என்ற களப்பிரர் ஒருவரையும், மெய்ப்பொருள், இடங்கழியார், நரசிங்கமுனையரையர், பெருமிழலைக் குறும்பர் என்ற சிற்றரசர் நால்வரையும் திருத் தொண்டத் தொகை அடிப்படையில் பாடியுள்ளார். இவர்களை அல்லாமல் திருநகரச் சிறப்பு என்ற பகுதியில் மனுநீதிச் சோழன் என்பவன்பற்றியும் பாடியுள்ளார். என்றாலும் இப்புராணங்கள் அனைத்தையும் படிக்கும் பொழுது மனுநீதி, கோச்செங்கணான், புகழ்ச்சோழர் என்பவர்களைப் போற்றியது போல ஏனைய மன்னர்களை இவர் திறந்த மனத்துடன் பாராட்டியதாகத் தெரிய வில்லை. திருநாவுக்கரசர் புராணத்தில் வரும் பல்லவனை ஏசுவது தவிரப் பெயரைக் கூடக் கூறவில்லை. எத்தனையோ வரலாற்றுச் செய்திகளையும், கல்வெட்டிற் கண்டுள்ள செய்திகளையும், படித்துப் புராணம் பாடிய இப் புலவருக்கு நாவுரக்கரசரைத் துன்புறுத்திய பல்லவன் பெயரும் சிறுத்தொண்டரைச் சேனாதிபதியாக வைத்திருந்த பல்லவன் பெயரும்தெரியாமல் இருந்திருக்க நியாயம் இல்லை. என்றாலும் இவர்கள் இருவர் பெயரையும் கூற மறுக்கிறார் என்றால் அதன் காரணம் யாதாக இருக்கலாம்? சோழர்கட்கு அடுத்த நிலையில் அவரால் புகழப்பெறுபவர் சேர மன்னராவார். எப்படி ஆய்ந்தாலும் சோழர்கள் தவிர அவரால் குறிக்கப்பெற்ற பிற மன்னர்கள் அனைவரும், ஒன்று தாம் சமணராக இருந்து பின்னர்ச் சமயம் மாறியவர்; இன்றேல் அவர்கள் முன்னோர்கள் சமயம் மாறியவர்களாக இருந்துள்ளனர். களப்பிரராக இருந்தும் சைவத்தைத் தழுவின கூற்றுவரை ஏற்றிப் புகழும் புலவர் பல்லவர்களை ஏற்றிப் புகழ மறுக்கின்றார். ஐயடிகள் காடவர் கோனும், கழற்சிங்கனும் நம்பியாரூரரின்
பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/301
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை