தொண்டு நெறியே சைவ நெறி 27.5 அழகிய கோயிலுக்குச் செல்லுமுன் இடப்புறத்தில் கச்சி அநேகதங்காவதம் என்ற மிகச் சிறிய கோயில் ஒன்றுள்ளது. ஒரு சிறிய விநாயகர் கோயில் அளவேயுள்ள அக்கோயிலை மட்டும் பாடிவிட்டு, நம்பியாரூர், இராசசிம்மன் கட்டிய அற்புதக் கோயிலைப் பாடாது போனதன் நோக்கம் யாது? பல்லவர்கட்கு நண்பராக இருந்தவர்தாமே சுந்தரமூர்த்திகள்? அப்படிப் பட்டவர் கயிலாய நாதர் கோயிலைப் படாத காரணம் யாது? ஆம்! அக் கோயிலைக் கட்டியவன் தன் அகங்காரத்துக்குக் கோயில் கட்டினான். சிவபெருமான் கயிலை மலையைவிட்டு வருவதானால், உமையொடும் தங்குவதற்குரிய முறையில், தான் கோயில் கட்டியதாகக் கல்லெழுத்தில் பொறித்தான். அதனால் இறைவன் கூட அவன் குடமுழுக்குக்குக் குறிப்பிட்ட நாளில் வரவியலாது என்று மறுத்துவிட்டுப் பூசலார் கோயிலுக்குப் போவதாக அவனுடைய கனவில் கூறிவிட்டான். 'நின்றவூர்ப் பூசலன்பன் நெடிது நாள் நினைந்து செய்த நன்று நீடாலயத்து நாளை நாம்புகுவோம் நீ இங்கு ஒன்றிய செயலை நாளை ஒழிந்து பின் கொள்வாய் என்று கொன்றைவார் சடையான் அன்பர் கோயில் கொண்டருளப்போந்தார் என்று கூறி இறைவனே ஒதுக்கிவிட்ட கோயில் ஆகலானும், தமிழரல்லாத பல்லவர்கள் கட்டிய கோயிலாகலானும் சுந்தரர் அக் கோயிலைக் கண்ணெடுத்தும் பாராமல் அண்மையிலுள்ள பழைய கோயிலாகிய கச்சி அநேகதங்காவதம் என்ற கோயிலைப் பாடிப்போனார். சுந்தரராலேயே ஒதுக்கப்பட்ட பல்லவன் பெயரைத் தாம் ஏன் குறிக்க வேண்டும் என்று சேக்கிழார் நினைந்திருக்கலாம். இந்தக் கழற்சிங்கன்தான் சுந்தரர் காலத் திருந்தவன் என்று கால ஆராய்ச்சிக்காரர்கள் வாதிடுவாராயின் பூசலார்பற்றிச் சுந்தரர் பாடியதற்கு அமைதி கூற முடியாது போகும்! மேலும் அப்பர் காலத்துக்குக் கால் நூற்றாண்டுக்குள் வாழ்ந்தவராகச் சுந்தரரைக் கொள்ள வேண்டிய இன்றி யமையாமை ஏற்படும். எனவே இவர்கள் வாதம் வலுவுடையது அன்றென்பது விளங்கும். ஞான சம்பந்தர் செய்த சமுதாயப் புரட்சி திருஞானசம்பந்தர் பிற புறச் சமயங்களையும், வைதிகச் சமயத்தையும் எதிர்த்துப் போர்க்கொடி தூக்கினதின் வளர்ச்சி சுந்தரர் காலத்திலும் தொடர்வதைக் காணலாம். தமிழுடன்
பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/303
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை