பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/305

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டு நெறியே சைவ நெறி 27 7 இதில் மற்றொன்றும் கவனிக்க வேண்டியுள்ளது வரலாற்று அடிப்படையில் காண்பதானால் திருஞான சம்பந்தரும் நம்பியாரூரரும் அந்தணர்கள். ஆனால் அன்று வாழ்ந்திருந்த வேத வழக்கொடுபட்ட வைதிகப் பிராமணர்கள், கவுண்டின்ய கோத்திரத்தாராய ஞானசம்பந்தரையும், சிவ வேதியராகிய நம்பியாரூரரையும் பிராமணர்கள் என்று ஏற்றுக்கொண்டிருப் பார்களா என்பதும் ஐயத்துக்குரியதே. தமிழகத்தில் ஆதியி லிருந்து வாழ்ந்த அந்தணர்கள் இவர்களைச் சேர்ந்தவர்களே ஆவர். எனினும் பல்லவர்களால் இறக்குமதி செய்யப்பெற்றுப் பலவிடங்களிலும் குடியேற்றப்பெற்ற பாரத்வாஜ கோத்திர அந்தணர்கள் இவர்களை ஏற்றுக்கொண்டிருப்பது ஐயத்துக்கிட மானதே. அந்நிலையில் இங்கிருந்த அந்தணர்கள் சிலராவது பழைய வேத வேள்விகளை ஏற்றுக்கொண்டு அந்ந அந்தணர் களுடன் உறவாட முனைந்திருக்கவேண்டும். அந்நிலையில் தான் இரு அந்தணர்களும் (சம்பந்தரும், நம்பியாரூரரும்) தமிழுடன் தங்களைத் தாங்களே தொடர்புபடுத்திக் கொண்டு இறைவனைப்பாடி இருத்தல் வேண்டும். திருஞானசம்பந்தர் தேவாரத்தைப் படிப்போர்க்கு அவருடைய திருக்கடைக்காப்பில் 95 சதவீதம் தம்மைத் தமிழுடன் தொடர்புபடுத்திக் கூறுவது வியப்பைத் தராமல் இராது. தமிழகத்தில், தமிழர்களிடையே வாழ்ந்து பாடும் இப்பெரியார் ஓயாமல் தமிழுடன் ஏன் தம்மைத் தொடர்பு படுத்திப் பாடவேண்டும்? தமிழை ஏற்காமலும் இறைவனுக்குப் பூசனை புரிவதற்குத் தமிழ் தகுதியற்றது என்றும், வேள்வி முதலியன செய்பவர்கள் தமிழைப் போற்றிக் கற்க வேண்டியதில்லை என்றும் கூறும் கூட்டம் ஒன்று அரசியல் வலுவுடன் இங்கு இருந்திருக்க வேண்டும். அவர்கள் வாயை அடைக்கவே பிள்ளையார் இவ்வாறு ஓயாமல் தமிழைத் தம்முடன் தொடர்புபடுத்திக் கூறியிருத்தல் வேண்டும். வடமொழி வேதத்துக்கும், தமிழ் மறைக்கும் வேறுபாடில்லை என்பதைச் சுட்டவே அவர் முயன்றிருக்கிறார். இதனை உணர்ந்த சேக்கிழார் எழுதுமா மறையாம் பதிகத்திசை " என்றும் 'வேதம் தமிழால் விரித்தார்' என்றும் கூறியுள்ளார். வைணவத்திலும் இப்போராட்டம் இருந்துள்ளது என்பதை 'வேதம் தமிழ் செய்தான் மாறன் சடகோபன்’ என்ற வேதாந்த தேசிகர் வாக்காலும் அறியமுடிகிறது. திருஞானசம்பந்தர் செய்த சமுதாயப் புரட்சிகளும் அந்தணர்கட்கு அதிர்ச்சியைத் தந்திருக்க வேண்டும். திருநீல கண்ட யாழ்ப்பாணரை அவருடைய மனைவியாருடன் உடன்