பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 பெரியபுராணம் - ஒர் ஆய்வு அழைத்துச் சென்றதும் கூடவே யாழ் வாசிக்குமாறு செய்ததும் இத் தமிழகச் சைவம் என்ன இயல்புடையது என்பதைக் காட்டும் அறிகுறிகளாகும். திருநீலகண்ட யாழ்ப்பாணர் வருகையால் வேதியர் கூட்டமும், ஏன் மற்ற மேட்டுக்குடி மக்களுங்கூட அதிர்ச்சி அடைந்திருப்பின் திருஞானசம்பந்தரின் ஆற்றலின் எதிரே ஒன்றுஞ் செய்திருக்க முடியாது. தேவாரத்தில் காணப் பெறாத பல தகவல்களைச் சேக்கிழார் பிள்ளையார் புராணத்தில் பாடுவது பிள்ளையார் தொடங்கிய புரட்சியைத் தொடர்ந்து கொண்டு செலுத்தவேயாம். பாணர் மனைவியுடன் காழிப் பதிக்குவந்தார் என்று கூறுகையில் சேக்கிழார் 'பெரும் பாணர் வரவறிந்து பிள்ளையார் எதிர் கொள்ள ' என்று பாடுகிறார். அடுத்து. 'கோயிலினில் புறமுன்றில் கொடுபுக்குக் கும்பிடுவித்து ஏயும் இசையாழ் உங்கள் இறைவருக்கிங்கு இயற்றும் " என்று கூறும்பொழுது அதை எதிர்த்து யாரும் வழக்கிடும் ஆற்றல் பெற்றிருக்கவில்லை. இவ்வாறு சேக்கிழார் பாட என்ன ஆதாரம் என்பது தெரியவில்லை. இறுதிவரைப் பிள்ளையார் பாடப் பாணர் யாழ் வாசித்தார் என்றால் பாடுபவர் ஒரு புறமும் யாழ் வாசிப்பவர் ஒரு புறமும் இருந்து வாசிக்க இயலாதல்லவா? எனவே உடன் இருத்திக் கொண்டார் என்று சேக்கிழார் பாடுவது பொருத்த முடையதேயாகும். ஐயர் என்ற சொல் ஆட்சி இதைவிடச் சிறப்பான ஒரு நிகழ்ச்சியையும் கவிஞர் பாடுகிறார். திருநீலநக்கர் முத்தீ வளர்க்கும் அந்தணர். சிவலிங்கத்தின் மேல் சிலந்தி விழுந்ததை அவர் மனைவியார் ஊதி வெருட்டினார். ஆனால் எச்சில் பட ஊதினார் என்பதற்காக மனைவியையே தள்ளிவைக்கின்ற அளவு விதி மார்க்கத்தில் நம்பிக்கை உள்ளவர் திருநீலநக்கர். அவருடைய வீட்டிற்குப் பிள்ளையார் செல்கிறார். இதில் ஒரு வேடிக்கை என்ன வெனில் பிள்ளையார் உடன்செல்லும் தொண்டர் குழாம் முழுவதும் ஆண் மக்கள் கூட்டம். ஆனால் ஒரே ஒருவர் மட்டும் மனைவியுடன் வருகிறார்; அவர்தாம் பாணர். எனவே செல்லும் இடமெல்லாமும் அவர்கட்குத் தனி இடம் தேடித்தர வேண்டிய பொறுப்பும் பிள்ளையாருடையதாக ஆகிவிட்டது. இந்த நிலையில்தான் திருநீலநக்கர் மனை புகுந்தார் பிள்ளையார். திருநீலக்கர் ஊராகிய சாத்தமங்கையில் அவருடைய விருந்தினராகப் பிள்ளையாரும் அவருடைய பரிசன