28 2 பெரியபுராணம்- ஓர் ஆய்வு சிவனடியார்கள் மட்டும் உணவருந்தலாம் என்று கூறியிருப்பின் ஒரு சிலர் மட்டுமே உணவு கொள்ளும் நிலை ஏற்பட்டிருக்கும். 'நாதர் விரும்பும் அடியார்கள் என்ற தொடர் நாதனை விரும்பும் அடியார்கள் என்றும் 'நாதனால் விரும்பப்பட்ட அடியார்கள்’ என்றும் பொருள்படும். நாதனை விரும்பும் அடியார்கள் என்றால் சிவபெருமானை நம்பும் அடியவர்கள் மட்டும் என்று பொருளாகிவிடும். அப்படி என்றால் பிறருக்கு உணவில்லை என்றாகி விடும். எனவே 'நாதனால் விரும் பப்பட்ட' என்று பொருள் கொண்டால் 'இறைவனால் அருள் செய்யப்பெற்ற உயிர்கள்' என்று பொருள் தரும். உலகில் உள்ள எல்லா உயிர்களும் இறைவன் படைப்புத் தாம். எல்லா உயிர்களுக்கும் வேறுபாடு காட்டாமல் அவன் அருள் செய்கிறான். எனவே அனைவருக்கும் வேறுபாடின்றி உணவு தந்தார்கள் என்ற நுண்ணிய கருத்தைப் புலவர்.இவ்வளவு நுணுக்கமாகவும் அழகாகவும் தருகிறார். இரண்டு இடங்களில் தனித்தனியே உணவு இடுவதற்குக் காரணம் அவரவர் இருக்குமிடத்திலிருந்து நீண்டது.ாரம் சென்று உணவுட்கொண்டு வந்தால் வெயில் கொடுமையால் அவதியுற நேரும் ஆகலின் அவரவர் உறைவிடத்துக்குப் பக்கமான மடத்தில் சென்று உணவருந்த ஏற்பாடு செய்தது மக்கள்பால் இப் பெருமக்களுக்கு இருந்த கருணையை வெளிக்காட்டுவதாகும். ஒயாது சிவனடியே சிந்திக்கும் பிள்ளையார் பஞ்சத்தால் வாடினவர்கட்கு உணவு இட்டார் என்பதுடன் நில்லாமல் அதுவும் காலாகாலத்தில் படைக்கப்படுகிறதா? என்பதையும் தாமே நேரில் சென்று காணுகிறார். நாவரசர் மடத்தில் முன்னரும் தம் முடைய மடத்தில் காலந் தாழ்த்தும் உணவு படைக்கப்படுவதைக் கண்டு, ஆக்கி இடுபவர்களைக் கால தாமதம் ஆவதற்குரிய காரணத்தை வினவுகிறார் சிறிய பெருந்தகையார். தமக்குக் கிடைக்கும் பொற்காசு மாற்றுக் குறைவதால் உரைத்துப் பார்த்துப் பொருள் தருகின்றனர். வாகீசர் காசை அப்டியே பெற்றுக் கொண்டு உணவுப்பொருள் தருகின்றனர் என்று அடியவர்கள் கூறினர்: - 'திருஞானசம்பந்தர் அதுகேட்டுச் சிந்திப்பார் சிவபெருமான் நமக்குத் தந்த ஒரு காசுவாசிபட மற்றக் காசு நன்றாகி வாசிபடாது ஒழிவான் அந்தப்
பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/310
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை