தொண்டு நெறியே சைவ நெறி 283 பெருவாய்மைத் திருநாவுக்கரசர் தொண்டாற் பெறுங்காசாம் ஆதலினால் பெரியோன் தன்னை வருநாள்கள் தருங்காசு வாசிதீரப் பாடுவன் என்று, எண்ணியது மனத்துட் கொண்டார்." மறு நாள் வாசி தீரக்காசு நல்கும்படிக் கேட்டார் என்கிறார் சேக்கிழார். தொண்டின் அழுத்தத்தைக் கூறவந்தவராகலான் சேக்கிழார் இந் நிகழ்ச்சியை விரிவாகக் கூறுகிறார். மனம், மொழி, மெய் என்ற மூன்றில் பிள்ளையார் உடல் தொண்டு செய்யவில்லையாகலின் தலை மகனாகி இருப்பினும் தந்தையார் வாசியுடன் காசு தந்தார். நாவரசர் தொண்டால் பெறுங் காசு வாசியில்லாக் காசு என்பதைப் பிள்ளையாரே உணர்ந்து பேசுகிறார். அடியார்களைப் பொறுத்தமட்டில் 'கைத் திருத்தொண்டு செய் கடப்பாட்டினர் ஆகலின் இதற்கு அழுத்தம் தந்து கூறுகிறார் சேக்கிழார். பிள்ளையாரே 'தொண்டாற் பெறுங்காசு எனக் கூறியுள்ளமையாலும், உழவாரப் பணி செய்யும் கடப்பாட்டினராகலானும், நாவரசர் வாசியில்லாக் காசு பெற்றது சரியேயாம். இந்நாளைக் கண்கொண்டு இந் நிகழ்ச்சியைப் பார்த்துத் 'தொண்டுக்குக் கூலியா? நாவரசர் கூலிக்கு உழைத்தார் என்றால் அடுக்குமா?’ என்றெல்லாம் எழுகின்ற ஆராய்ச்சிகள் தொண்டையே வலியுறுத்துகிறார் சேக்கிழார் என்பதைக் கவனிக்கத் தவறிவிட்டன என்றே தோன்றுகிறது. ஆனால் கைத்திருத் தொண்டு செய்ய வேண்டிய கடப்பாடு சீவன் முத்தராய பிள்ளையாருக்கு இல்லை என்பது உண்மை தான். புரட்சி செய்து மக்களைத் தட்டி எழுப்ப வந்தவர்க்கு எல்லாப் பணிகளையும் செய்ய வேண்டும் என்ற இன்றியமை யாமை இல்லைதான். என்றாலும் தம் வயதுக்கேற்ப அவரும் பிறர் துயர் தீர்ப்பதில் ஈடுபட்டதை அறிதல்வேண்டும். பாடிப் பரவுவதும் தொண்டுதான். ஆகலின் இப் பெருமக்கள் தம்மைச் சுற்றியுள்ள மக்களிடத்துக் கொண்ட பரிவும் பாசமும் எத்தகையது என்பதை அறிதல்வேண்டும். பிற உயிர்களிடத்தில் அன்பு செய்யாமல் பூசை முதலியன வற்றில் ஈடுபடுவது தம்மையும் ஏமாற்றிக் கொண்டு இறைவனை யும் ஏமாற்ற முயலும் முயற்சியாகும். மக்கள் தொண்டே மகேசன் தொண்டாகும். அல்லாதவர்கள் பூசனையை இறைவனும் ஏற்பதில்லை என்பதை நாவரசர்,
பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/311
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை