பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/314

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 பெரியபுராணம்- ஓர் ஆய்வு எளியேன் அல்லேன்' என்று கூறி அனல் புனல் வாதங்கட்கு மார்தட்டிப் புறப்படுபவர். அவர் மேற்கொண்ட பணி அது வாதலின் யார் யாரைத் திருத்த வேண்டுமோ அதனைச் சிறிதும் கருணை காட்டாது செய்பவர். 'கொலையிற் கொடியாரை வேந்து ஒறுத்தல் பைங்கூழ் களை கட்டதனொடு நேர்' என்ற குறளுக்கு இலக்கணமாக அமைந்தவர். இதனை நமக்கு நினைவூட்டவே பிள்ளையார் தம்மைப் பலப்பல இடங்களில் தேவார்த்தில் புகலி வேந்தர், காழி வேந்தர், கழுமலமாநகர்த் தலைவர்' காழியர்கோன்’ சிரபுரக் கோன்' காழியர் காவலன்' காழியர்தந் தலைவன்' தக்க சீர்ப்புகலிக்கு மன், தமிழ்நாதன்' கொச்சை வேந்தன்' என்றெல்லாம் கூறிச் செல்கிறார். புரட்சி செய்ய வந்த வேந்தன், சாம, தான, பேத, தண்டம் என்ற வழிகளை மேற்கொள்ளுதல் சரியே என்கிறார் சேக்கிழார். மதுரையில் சமணர் கழுவேறியதைத் தடுத்திருக்கலாம். ஆனால் மன்னராகிய இவர் தீயிட்ட குற்றத்துக்குத் தக்க தண்டனை அதுவே என்று நினைத்து அரசன் செயலைத் தடை செய்யாது இருந்துவிட்டார் என்பதை புகலியில் வந்த ஞானபுங்கவர் அதனைக் கேட்டும் இகலிலர் எனினும் சைவர் இருந்து வாழ் மடத்தில் தீங்கு தகவிலாச் சமணர் செய்த தன்மையால் சாலும் என்றே மிகையிலா வேந்தன் செய்கை விலக்கிடா திருந்தவேலை ’’ என்று கூறுகிறார் சேக்கிழார். உலகில் பண்டு தொட்டே சமயப் போராட்டம் மக்களிடைத் தோன்றி வளர்ந்துதான் வந்துள்ளது. சமணர் கழுவேற்றம் என்பதை உறுதிப்படுத்தத் தேவாரம் முதலியவற்றில் வேறு அகப்புறச் சான்றுகள் எதுவும் இல்லை. நம்பி திருவந்தாதியில் தான் இருமுறை இது பேசப்படுகிறது. குலச்சிறைபற்றிக் கூறவந்த நம்பி, 'அருந்தமிழ் ஆகரன் வாதில் அமனைக் கழுதுதிமேல் இருந்தமிழ் நாட்டை ஏற்றுவித்தோன்' என்றும், நெடுமாறனைப் பற்றிக் கூறும்பொழுது' 'கார்த் தண்முகில் கைக்கடற் காழியர் பெருமாற் கெதிராய் ஆர்த்த சமணர் அழிந்தது கண்டு மற்றாங் கவரைக் கூர்த்த கழுவின் துதிவைத்த பஞ்சவன்' " என்றும் கூறியுள்ளார். நம்பி நாட்டில் வழங்கும் கதைகளை எல்லாம் எடுத்து, ஆதாரம்போல் கூறும் இயல்புடையவர். இத்