தொண்டு நெறியே சைவ நெறி 2 9) சமண சமயம் புகுந்த அவர் நூல்கள் பலவற்றையும் கற்று, பிறரை வாதில் வெல்லும் ஆற்றலும் பெற்று வளர்கின்ற நிலையிலும் தம்மைப் பொறுத்தமட்டில் மகிழ்ச்சியோடு இருக்க வில்லை என்று நினைக்க வேண்டியுளது. ‘உலகின்கண் ஒளியுடைய வித்தகராய்' " இருப்பவர் எல்லோரும் மன அமைதியுடன் வாழ்கிறார்கள் என்று கூறுவதற்கில்லை. சாக்கரட்டீஸ், டால்ஸ்டாய் போன்ற வர்கள் இதற்கு எடுத்துக்காட்டாவர். இதுவரைத் தம் தமக்கை யாரான திலவதியார் அவருடைய நினைவில்கூட வரவில்லை என்பதை வேறுவகையில் விளக்குகிறார் கவிஞர். சூலை நோயை யாரும் போக்க முடியாமல் கைவிட்டவுடன், 'பண்டை உறவு உணர்ந்தார்க்குத் திலகவதியார் உளராக் கொண்டு அவர் பால் ஊட்டுவான்தனை விட்டார் குறிப்புணர்த்த "' புதிய உறவினராய சமணர் கைவிடுதலின், பழைய உறவாகிய திலகவதியாரை நினைந்து தன் மடைத்தொழிலாளனைச் சென்று குறிப்பாகக் கூறுமாறு ஏவினார் என்பதுதான் நேரிய பொருள். இனிக் குறிப்புப் பொருளாகப் பண்டை உறவு உணர்தல் என்பது இப் பிறப்பின் முற்பிறப்பில் முனிவராக நின்று இறைவனை அடையத் தவமுயன்றவர் இவராகலின் அந்த நிலையில் இவருக்கும் இறைவனுக்கும் இருந்த உறவை உணர்ந்தார் என்கிறார். இறைவன் திலகவதியாரிடம் கனவில் வந்து, 'முன்னமே முனியாகி நமையடையத் தவ முயன்றான் ’’ என்று கூறினான் என்பதால் அறியலாம். எல்லையற்ற துயரம் வலி, துன்பம் முதலியவற்றை அனுபவிக்கின்ற நேரங்களில் பொறி புலன்கள் அனைத்தும் செயலிழந்துவிடும் காலையில் புறமனம், அக மனம் என்பவையும் தொழிற் படாது அடங்கி நிற்கும் நேரத்தில், சித்தம் அல்லது ஆழ் மனத்தில் (Conscious ness) முன்பின் தொடர்பான உணர்வுகள் வருதலுண்டு. அவை விழிப்புணர்வில் படுவதும் உண்டு, படாமற் போவதுமுண்டு அப் பழைமைபற்றிய உணர்வுகள் வீணாவதில்லை. அதன் பிறகு இவ்வுணர்வுகளே உள்நின்று ஒருவனைப் புதிய வழியில் செலுத்து கின்றன. நாவரசரைப் பொறுத்தமட்டில் பண்டை உறவை உணர முடிந்தது என்கிறார் கவிஞர். இதனைக் காரண காரிய ரீதியாக நிறுவுவது இயலாத காரியம். அறிவினால் ஆராய்ந்து இது எவ்வாறு வந்தது என்று கூறமுடியாதாகலின் பண்டையுறவு
பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/317
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை