பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/318

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 0 பெரியபுராணம்- ஓர் ஆய்வு அறிந்தார்க்கு' என்று கூறாமல் உணர்ந்தார்க்கு என்று பேசுகிறார் கவிஞர். 'பண்டை உறவு உணர்ந்தார்க்கு' என்பதற்குப் 'பழைய உறவாகிய திலகவதியாரை நினைந்து' என்று பொருள் கூறுதல்' நேரிதாயினும் உரை சிறக்காமையும் நாவரசரின் பின்னைய வளர்ச்சியை அறிவிக்காமையும் காணலாம். பண்பில் மேம்பட்ட வராகலின் தமக்கையிடம் குறிப்பாக உணர்த்துமாறு ஏவினார். சோதரியாராயினும் அவர், இவர் பொருட்டாகவே உயிர் தாங் கினார் என்பதை மறந்து, அவரை விட்டு வந்துவிட்ட மருணிக்கி யார் இப்பொழுது அவரிடம் சென்று உரிமையுடன் உறவாடும் உரிமையை இழந்துவிட்டார். அதனை நன்குணர்ந்திருந்தமை யின் குறிப்பால் உணர்த்த ஏவினார். தந்துயர், அளவில் மிஞ்சிய வழிப் பிறருடைய விருப்பு வெறுப்புகளைப்பற்றிக் கவலை யுறாமல்தம் காரியம் நடைபெறவேண்டும் என்று நினைக்கும் சாதாரண மனிதரல்லர் இப் பெரியார். எந்த நிலையிலும் பண் பாடு தவறாதவர். ஆகலின், ஒரே சோதரியாராக இருந்தும், தமக்கெனவே அவர் உயிர் வாழ்பவராக இருந்தும், அவரை வருக என்று அழைத்துவர ஏவலாளனிடம் பெரியார் கூறவில்லை. இந் நிகழ்ச்சி அவருடைய வாழ்வில் இரண்டாவது திருப்பமாக அமைந்துவிட்டது என்பதை அறிய முடிகிறது. 'நம்பர் அருளாமையினால் அமண் சமயம் குறுகினார்' இப்பொழுது பண்டை உறவு உணர்ந்து விட்டார் ஆகையால் இனி நடைபெறுவனவெல்லாம் அப் பண்டை உறவு செலுத்தும் வழிச் செல்வதே தவிர வேறு இல்லை. நாவரசர் சோதரியாரைச் சென்று காணல், அதிகை வீரட்டப்பெருமானை வணங்கல், திருப்பதியம் பாடல் முதலிய யாவும் புறச் செயல்களேயாம். அச் செயல்கள் நிகழ மூலமாக இருந்த திருவருட் சக்தி பழைய உணர்வை அவருக்கு உண்டாக்கிவிட்டவுடன் அதன்வழி நடப்பவராக ஆவிட்டார். இந்தப் பண்டை உறவு கை கொடுக்காமையால் இதுவரை கற்று, கேட்டு, தெளிந்து, வென்று நின்றாலும் 'உலகின்கண் ஒளியுடைய வித்தகராய்' ' நின்றாலும் அவருடைய அகத்தில் ஒளியுடையராய் விளங்கவில்லை. அகத்தில் ஒளியுடைய வராய் விளங்க வேண்மாயின் அதற்கு இறையருள் வேண்டும். அது கிடைக்கின்றவரை எவ்வளவு கல்வியும் புகழும் ஒளியும் கிடைப்பினும் ஆன்ம முன்னேற்றம் என்பது கிடைத்தற்கில்லை. அது இப்பொழுது பெரியாருக்குக் கிடைத்துவிட்டது. இந்தப்