பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/319

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டு நெறியே சைவ நெறி 29 I பண்டைய உறவை (மெய்ஞ்ஞானத்தை) இவருக்குட் புகுத்த இறைவன் சூலை நோயினைக் கருவியாகப் பயன்படுத்தினான். பிறர் அதனை உடலை வருத்தும் நோய் என்பர்; உண்மை உணர்ந்தோர் சூலையை, ஊசி மருந்தேற்றும் குழாய் என்பர். இதே போன்று மற்றொருவனும் பேசியதை மற்றோர் இலக்கியம் பேசுகிறது. இராமன் எய்த அம்பைப் பிடுங்கிய வாலி உண்மை உணர்ந்த பிறகு 'இராமா! இந்த மெய்ஞ்ஞானத்தைக் கூர்மையான அம்பின் மூலமாக எனக்கு ஏற்றினை' என்ற பொருளில் 'ஏவுகூர் வாளியால் எய்து...அறிவு தந்தருளினாய்' என்று கூறுதல் காணலாம். சிவனடியார் செயல்களைக் கவனத்துடன் எடைபோட வேண்டும் இவ்வாறு பண்டை உறவாற் பிறந்த அந்த மெய்யுணர்வு மருணிக்கியாரை ஒப்பற்ற சத்யாக்கிரகியாக மாற்றிவிட்டது. இரண்டு வகையில் அடியார்களைப் பிரித்துக் கூறுவது பெரிய புராணம். எறிபத்தர், விறன்மிண்டர், சிறுத்தொண்டர், சண்டேசர், கழற் சிங்கர், செருத்துணை, கலிக்கம்பர், ஏயர்கோன், சத்தியார், மூர்க்கர், முனையடுவார் என்ற இவர்கள் வன்முறைச் செயல்களில் ஈடுபட்டவர்கள். வன்முறைச் செயல்கள் என்று கூறியவுடன் தகாத கொடிய செயலைச் செய்தவர்கள் என்று எண்ணுவது தவறு. செயலைமட்டும்கொண்டு ஒன்றை முடிவு செய்து விடக்கூடாது. ஒருவரை, அவர் எந்த நாட்டவராயினும், தனியே ஒருவர் பகைமை காரணமாகக் கொன்று விட்டால் அது கொலை எனப்படும். ஆனால் அதே பகை காரணமாக ஒருவர் போர்க்களத்தில் அதே நாட்டுக்காரர் பத்துப் பேரைக் கொன்றால் அவர் போற்றப்படுகிறார். 'மாபெரும் வீரர்' என்று பரிசுகள் வழங்கப்படுகிறார். முதலில் நடைபெறுவது தன்னலம் காரணமாக எழுந்தது; எனவே அது தண்டிக்கப்படுகிறது. இரண்டாவது நிலையில் தன்னலம் இல்லை; நாட்டுப்பற்று என்ற அடிப்படையில் நடைபெறுகிறது; எனவே அதுபோற்றப்படுகிறது. புகழ்ச் சோழர் அரசரா? அடியாரா? அதே போலத் தாம் கொண்ட கொள்கை, குறிக்கோள் என்பவற்றிற்காக இந்த அடியார்கள் வன்முறையில் ஈடுபட்டனர். எனவே அவர்கள் செயல் குற்றமாகக் கருதப்படவில்லை. மேலே