பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/322

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 2 பெரியபுராணம்- ஓர் ஆய்வு காட்டப்பெற்ற நாயன்மார்கள் செயல்கள் எதுவும் தன்னலத்தின் அடிப்படையில் நடைபெறவில்லை. தன்னலத்தை முழுவது மாகத் துறந்து ஒரு கொள்கைக்காகத் தன்னை முழுவதும் அர்ப்பணித்துக் கொண்டவனைத் தியாகி என்று இன்றைய உலகம் பேசுகிறது. அன்று அவர்கட்குப் பெயர் அடியார்கள், தொண்டர்கள் என்பவையாகும். பெரிய புராண ஆசிரியர் முதலமைச்சராக இருந்ததால் சட்டம், நீதி என்பவற்றை நன்கு அறிந்திருந்தமையின் இவ்வடியார்கள் வாழ்க்கையின் அடிப்படை நுணுக்கத்தை நன்கு அறிந்திருந்தார். உதாரணமாக ஒன்றைக் காணலாம். முன்னரே விரிவாகக் கண்ட புகழ்ச் சோழர் வரலாற்றையே எடுத்துக் கொள்வோம். கருவூரில் தங்கிய அவர் மன்னர்கள் வந்து திறையளந்த பின் அமைச்சரைப் பார்த்துத் திறை செலுத்தாத குறுநில மன்னர்கள் உளரோ? என்றார். இதனைக் கூறவந்த சேக்கிழார் இவர் இவ்வாறு கேட்டார் என்று கூறிவிட்டு, அடுத்த பாடலில் இவ்வாறு கேட்டவர் யார் தெரியுமா? எறிபத்தரிடம் வாளை நீட்டி ‘என்னையும் கொன்றருளும்' என்று வேண்டிய அதே அரசர்தாம் என்று கூறுவது ஆழ்ந்து நோக்கற்குரியது. 'திறை கொணர்ந்த அரசர்க்குச் செயலுரிமைத் தொழிலருளி முறை புரியும் தனித்திகிரி முறை நில்லா முரண் அரசர் உறை அரணம் உளவாகில் தெரிந்துரைப்பீர் என உணர்வு நிறைமதி நீடமைச்சர்க்கு மொழிந்தருளி நிகழும் நாள். ' 'சென்று சிவகாமியார் கொணர்திருப் பள்ளித்தாமம் அன்று சிதறுங் களிற்றை அறளறிந்து பாகரையும் கொன்ற எறிபத்தர் எதிர்' 'என்னையுங் கொன்றருளும்' என வென்றிவடி வாள் கொடுத்துத் திருத்தொண்டின் மிகச் சிறந்தார்’ i () 5 என்பன சேக்கிழார் கூறும் பாடல்கள். இவை இரண்டையும் இங்கே சேர்த்துக் கூற வேண்டிய தேவை என்ன? எறிபத்தர் புராணத்தில் மிக விரிவாக இதைப் பேசிய பிறகு இங்கு இந்த இரண்டையும் கூறுவதன் நோக்கம் ஒன்று உண்டு. அடியார், தொண்டர் என்று கூறினவுடன் அவர்கள் உலகப் பற்றைத் துறந்து விட்டு வாயில்லாப் பூச்சிகளாக எங்கோ ஒரு மூலையில், உலகில் என்ன நடந்தாலும் நமக்கென்ன என்று இருக்கவேண்டும் என இடைக் காலத்தில் ஓர் எண்ணம் இத் தமிழ் நாட்டில் புகுந்திருந்தது. போலிச் சமயவாதிகள் தங்கள் சோம்பேறி வாழ்க்கைக்கு இப்படி ஒரு சமாதானத்தைக் கற்பித்து