தொண்டு நெறியே சைவ நெறி 29.3 நாட்டில் உலவ விட்டிருந்தனர். புறத் துறவுடையார் மட்டுமே பெரியவர்கள், அடியார்கள். அவர்கள் ஒன்றுமே செய்யாமல் இருக்கவேண்டும்; ஏனையோர் அவர்களுடைய செளகரியங்களைக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் பரவி இருந்த காலத்தில் சேக்கிழார், சைவ சமயம் இவ்வாறு கருதவில்லை என்பதை நுணுக்கமாக எடுத்து விளக்க வருகிறார். எறிபத்தராகிய தொண்டரிடம் வாளை நீட்டி என்னையுங் கொல்லும் என்று கூறுகிறவர் புகழ்ச் சோழ நாயனார் என்ற அடியார், தொண்டர், தனி மனிதர். அவருடைய தலையாய குறிக்கோள் சிவனடியார்கட்கு வேண்டுவன செய்வது, அவர்கட்கு எவ்வித ஊறும் நேராமல் பார்த்துக் கொள்வது; அவர்கட்கு வேண்டிய தொண்டைச் செய்வது என்பனவாகும். அப்படி யானால் சிவனடியார் தவறு செய்து விட்டால் அரசராகிய இவர் என்ன செய்வார்? சிவனடியார் என்பதற்காக விட்டு விடுவாரா? என்ற வினா எழுமன்றே! அதற்கும் விடைகூறுகிறார் சேக்கிழார். அரண்மனையிலிருந்து கோபத்துடன் பகைவரை எதிர்பார்த்து வந்த மன்னனிடம் இவர் தான் யானையைக் கொன்றார்' என்று காட்டினார்கள். அவருடைய முதலாவது எண்ணமாக மனத்தில் தோன்றியது யாது எனச் சேக்கிழார் இதோ கூறுகிறார். 'குழையணி காதினானுக் கன்பராம் குணத்தின் மிக்கார் பிழைபடின் அன்றிக் கொல்லார்; பிழைத்த துண்டு....' 1 0 6 சிவனடியார் குணத்தின் மிக்கவராகலான் பிழை இருந்தா லொழியத் தண்டனை தர மாட்டார் என்பதே அதற்கு விடை யாகும். இவ்வாறு ஒரு மன்னன் முடிவுக்கு வரலாமா? வருவது சரியே என்று மற்றொரு மன்னவன் வரலாற்றில் மற்றொரு கவிஞர் கூறுவதையுங் காணலாம். தாயிடம் மீண்ட பரதன் தசரதன் எங்கே என்று கேட்க அவள், 'அவன் வானத்தான்' என்றாள். தான் வணங்கும் தெய்வமாகிய இராமன் எங்கே? என்று கேட்டான். அவள் சற்றுஞ் சலியாமல் 'அவன் கானத்தான்' என்றாளாம். தவறு செய்தவர்களைக் காட்டிற்கு அனுப்பிவிடுவது அந் நாளையப் பழக்கம். அதை நினைந்து பரதன் இதோ பேசுகிறான்: 'தீயன இராமனே செய்யு மேல், அவை தாய் செயல் அல்லவோ, தலத்துளோர்க்கு எலாம்: '
பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/323
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை