பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/324

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.94 பெரியபுராணம்- ஓர் ஆய்வு இராமன் தீயன செய்தல் இயலாது. உலகம் தீயன என்று தவறாக எண்ணுவதை இராமன் செய்தால் அது தாய் குழந்தை அழ அழ வாய் நெரித்து மருந்து புகட்டுவது போலாகும். எனவே சிவனடியார் தவறு செய்ய மாட்டார். ஒரு வேளை செய்தால் அதற்குரிய தக்க காரணம் இருந்திருக்கும். எனவே அது தவறாகாது என மன்னன் கருதினான். இது அடியவராக இருந்த புகழ்ச் சோழர் மன நிலை. இதன் எதிராக மன்னனாக இருக்கும் பொழுது திறை செலுத்தாத மன்னர் உளரா? என்று கேட்பது அரசனுடைய கடமையாகும். 'அதியன் என்ற அரசன் ஒருவன் உளன் என அமைச்சர் கூற அவன்மேல் படை எடுக்கச் சொன்னதும், அவர்கள் மீள்கையில் ஒரு சிவனடியாரைத் தவறுதலாகக் கொன்று அவர் தலையைக் கொணர்ந்ததும் முன்னர்க் கண்டோம். அரசனாக இருப்பவன் இது ஏதோ கவனக் குறைவால் நடந்தது என்று எண்ணி இருப்பின் அதில் தவறு கூறமுடியாது. நூற்றுக் கணக்கானவர் கொல்லப் படுவது அரசனுடைய போர் என்ற அறத்தின் பாற்படும். ஆனால் கவனக் குறைவால் ஒரு சிவனடியார் கொல்லப்பட்டால் அது மன்னிக்க முடியாத குற்றம் எனப் புகழ்ச் சோழர் என்ற அடியார் நினைக்கின்றார். ஒரே நேரத்தில் அரசராகவும், அடியாராகவும் இருக்க முயல்கிறார் புகழ்ச் சோழர். இந்த இரண்டு நிலைகட்கும் முரண்பாடு வராத வரையில் சரியே. ஒரு வேளை வந்துவிட்டால் என்ன செய்வது? இம் மாதிரி நேரங்களில் அவரிடம் இருக்கும் இரண்டு பண்புகளில் எது விஞ்சி நிற்கின்றதோ, அது வெற்றி பெறும். போர்க்களத்தில் கொல்லப்படுபவர் யார்? என்று ஒவ்வொருவராகப் பார்த்துப் போரிடுதல் இயலாத காரியம். மேலும் சடை முடியும் திருநீறும் உடைய அடியார் ஏன் போர் நடைபெறும் இடத்திற்கு வரவேண்டும்? அவரைப் போர் மும் முரத்தில் கொன்றிருந்தால் அதை மாபெருந் தவறு என்று கூற முடியாது. அரசநிலை மிகுமானால் இந்த வாதம் செல்லுபடி யாகும. என்னதான் போரானாலும் சிவனடியார் ஒருவருக்குத் தெரிந்தோ தெரியாமலோ தீங்கிழைத்துவிட்டால் அது மன்னிக்க முடியாத குற்றம். அதனை எவனோ பேர் ஊர் தெரியாத போர் வீரன் செய்திருப்பினும் அக் குற்றத்திற்கு அரசனும் பொறுப் பாவான். எனவேதான் புகழ்ச் சோழர் யார் என்ன சொல்லியுங் கேளாமல் தீப்பாய்ந்தார். இந்த வர்தம் அடியார் நிலை மிகுதி யானால் செல்லுபடியாகும். புகழ்ச் சோழர் முதலில் சிவனடியார்; இரண்டவாது சோழ மன்னர்.