பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/326

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 6 பெரியபுராணம் - ஒர் ஆய்வு யின் நுணுக்கத்தை, அடிப்படையை, மனநிலையைகுறிக்கோள் களை மிக நன்றாக அறிந்திருந்தார் என்பதனாலேயே தந்தனர். இவ் அடியார்கள் செய்த செயல்கள் அவர்கள் மனநிலையில் நின்று காணும் பொழுது சாதாரணச் செயல்களாகவே அவர் களால் கருதப் பெற்றன. நம்முடைய நிலையில் நின்று பார்க்கும் பொழுதுதான் அவை செயற்கருஞ் செயல்களாகக் காட்சியளிக் கின்றன. வன்முறையில் ஈடுபட்டவர்கள், தாம் என்ற தன்மையை இழந்து தொழிற்பட்டமையின் அவர்களை அதுபற்றிக் குறை கூறுவது சரியன்று. எவ்வளவுதான் அகங்காரம் என்பதை விட்டு விட்டு வாழ்ந்தவர்கள் எனினும் உலகத்தில் நம்மிடையே வாழ்ந்தவர்கள் ஆகலின் ஒரு சிலருடைய செயல்கள் நம்முடைய விமர்சனத்துக்கு ஆளாகின்றன. அத்தகைய நிகழ்ச்சிகள் வரும் பொழுது சேக்கிழார் நம் மனத்தில் தோன்றக்கூடிய அத்தனை ஐயங்களையும் தாமே தோற்றுவித்துக்கொண்டு அவற்றிற்கு விடை கூறுவதுபோலத் தம் கவிதைகளை அமைத்துக் காட்டுவார். உதாரணத்திற்கு ஒரு வரலாற்றைக் கண்டுவிட்டு மேலே செல்லலாம். இயற்பகையார் வரலாற்றின் விளக்கம், இன்று பலராலும் விமர்சிக்கப்படுகின்ற வரலாறு இயற்பகை யார் வரலாறாகும். மைந்தனைக் கடவுளுக்காகக் கொடுத்த கதை பிற சமயங்களிலும் உண்டு. ஆனால் இயற்பகையார் வரலாறு போன்ற ஒன்றை உலக சமய வரலாறுகளில் வேறு எங்கும் காணமுடியாது. அன்றியும் படிப்பவர்கள் இதனை ஏற்றுக் கொள்ளவும் துணியமாட்டார்கள். எனவே எடுத்த எடுப்பிலேயே கவிஞர் இவர் உலகத்தில் வாழ்ந்தாலும் முற்றிலும் நம்முடைய சட்ட திட்டங்கட்கும் பழக்க, வழக்கங்கட்கும் மாறுபட்டவர் எனவே இவரைப்பற்றி ஆராயத் தொடங்கு முன்னர் உலகியல் நியதி நடைமுறைகள் என்ன என்பவற்றை இவரிடம் எதிர்பார்க்க வேண்டா என்ற எச்சரிக்கை செய் கின்றார். அவர் பெயரைக் கூடக் கூறாமல் 'அக்குலப்பதி குடிமுதல் வணிகர் அளவில் செல்வத்து வளமையின் அமைந்தார் செக்கர் வெண்பிறைச் சடையவர் அடிமைத் திறத்தின் மிக்கவர் மறைச்சிலம்படியார், மிக்க சீரடியார்கள் யார் எனினும் வேண்டும் யாவையும் இல்லை என்னாதே