தொண்டு நெறியே சைவ நெறி 2.99 மனத்தில் எண்ணக்கூடத் தோன்றவில்லை. எனவே 'இசையலாம் எனில் இயம்பலாம் என்பவற்றிலுள்ள அவரைச் சிக்கவைக்கும் சூழ்ச்சியை இயற்பகையார் புரிந்து கொள்ளவே இல்லை. இதற்கு விடையாக அப்பெரியார் 'யாதும் ஒன்றும் என் பக்கல் உண்டாகில் அன்னது எம்பிரான் அடியார் உடைமை; ஐயமில்லை; நீர் அருள் செய்யும்' என்கிறார். யாது, ஒன்று என்பதனால் அப்பொருள் எதுவாக இருப்பினும் அவரிடமிருந் தால் அதற்குச் சொந்தக்காரர் அவர் அல்லராம். எம்பிரான் அடியார்தாம் அதற்கு உரிமையாளராம். அதனை வைத்திருக்க வேண்டிய தர்மகர்த்தாவாகவே, இயற்பகையார் தம்மைக் கருதிக் கொள்கிறார். அடியவர் உடைமை என்பதால் அதனை என்னவேண்டுமானாலும் செய்து கொள்ளும் முழு உரிமையாள ராக (absolute ownership) அடியவர்கள் இருக்கின்றார்கள். இவ்வாறு கூறிவிட்டு 'நீர் அருளும்' என்கிறார் கொடுப்பவர். 'தயை கூர்ந்து என்னிடம் கேட்கும் படி வேண்டிக் கொள்கிறேன்' என்ற பொருளில் கொடுப்பவர் வாங்கிக் கொள்பவரைப் பார்த்துப் பேசுவது விந்தையிலும் விந்தை! வந்த தூர்த்த வேடத்தர் 'மன்னு காதல் உன்மனைவியை வேண்டி வந்தது இங்கு' என்று அங்கணர் எதிரே சொன்ன போதிலும்... ' என்று கவிஞரே பாடுகிறார். எந்த ஒரு மனிதனும் மற்றொரு மனிதனிடம் துணிந்து கூறமுடியாத சொற் களைக் கூறினாராம். கூறினவன் அங்கணன் என்று நமக்குத் தெரியும். ஆனால் இவ் வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டிருந்த இயற்பகையாருக்கு எதிரில் இருப்பவர் யார் என்று தெரியாது. ஓர் அடியவர் என்றுதான் அவர் நினைந்து பேசுகிறார், ஆனால் ஓர் அடியார் இத்தகைய வார்த்தைகளைப் பேசுவாரா என்ற ஐயங்கூட அவர் மனதில் தோன்றவில்லையாம். காரணம் அடியார்கள் தவறு செய்யமாட்டார்கள்; அவர்கள் அப்படிச் செய்தால் உலகத்தார் அதனைத் தவறு என்று கருதினாலும் கூறினாலும் இயற்பகையார் அதில் தவறு காணப் போவதில்லை. இது ஒரு வகையான மனநிலை. இதில் நாம் குற்றங்கண்டு கூறிப் பயனில்லை. அங்கணர்,"உன் மனைவியை வேண்டி வந்தது இங்கு' என்று எதிரேசொன்ன போதிலும், இயற்பகையார் மனத்தில் எல்லை யற்ற சினம் தோன்றுவதற்குப் பதிலாக முன்னையின் மகிழ்ச்சி தோன்றிற்றாம். மகிழ்ச்சி தோன்றிற்றா? வியப்பாக இருக்கும் நமக்கு. ஆனால் தம்மிடம் இல்லாத ஒன்றை எங்கே கேட்டு
பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/329
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை