30 0 பெரியபுராணம்- ஓர் ஆய்வு விடப் போகிறாரோ என்று அஞ்சிக் கொண்டிருந்த அடியாருக்கு 'இருப்பதைக் கேட்டாரே என்று மகிழ்ச்சி தோன்றிற்றாம். உடனே அவர் கூறிய விடை அவருடைய மனநிலையை நன்கு படம் பிடித்துக் காட்டுகிறது. 'இது எனக்கு முன்பு உள்ளதே வேண்டி எம்பிரான் செய்தபேறு எனக்கென்னாக் கதுமெனச் சென்று தம்மனை வாழ்க்கைக் கற்பு மேம்படு காதலியாரை விதிமணக்குல மடந்தை இன்று உன்னை இம் மெய்த்தவர்க்கு நான் கொடுத்தனன் என்ன மதுமலர்க் குழல் மனைவியார் கலங்கி மனந்தெளிந்து பின்மற்றிது மொழிவார்' " என்று கூறும் பொழுது அடியவர் 'இது எனக்கு முன்பு உள்ளது' என்று கூறுவது வியப்பை அளிக்கிறது. முதலில் 'யாது ஒன்று என்பக்கம் உளதாகில்... உடைமை' என்று கூறியவர் இப்பொழுது 'இது முன்பு எனக்கு உள்ளது' என்று கூறுவதால் அவர் இந்த வேண்டுகோளின், ஆழத்தையோ, கொடுமையையோ அறிய வில்லை என்பது தெளிவாகிறது. வந்தவர் உன் மனைவி என்று கூறியுங் கூட இது என்னிடம் முன்பே உள்ளது' என்று அஃறிணை யில் இயற்பகையார் பேசுவதால் அவரைப்பொறுத்தவரை அவர் வீட்டிலிருக்கும் தட்டு முட்டுச் சாமானுக்கும் மனைவிக்கும் எவ்வித வேறுபாடும் பாராட்டாத நிலையில் உள்ளார் என்பதை நாம் உணருமாறு செய்கிறார் கவிஞர். சிவனடியார் விரும்பிக் கேட்கும் ஒன்றை இல்லையே என் செய்வது என்று சொல்லவேண்டிய அவலநிலை வந்துவிடக் கூடாதே என்ற ஒரே வருத்தத்தில் இருந்தவராகலின் உள்ள பொருளைக் கேட்டாரே என்று மகிழ்ச்சி நிறைந்து விட்டது. இனி இந்த வரலாற்றில் உலகியல் முறையிலும் கவிஞர் பேசுகிறார். அடியார் உலகியற் பகையாராயினும் உறவினர் இச் செயல் நிகழவிட விரும்பவில்லை. எனவே வந்த வேதியர் அம்மையாரைப் பின் தொடருமாறு கூறிச் செல்கையில் உறவினர் வளைத்துக் கொண்டு 'இணைய தொன்று யாரே செய்தார்? இயற்பகை பித்தனானால் புனையிழை தன்னைக் கொண்டு போவதாம் ஒருவன்என்று
பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/330
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை