30 2 பெரியபுராணம்- ஓர் ஆய்வு திருவாரூரில் மனு நீதிக் கதை எங்கே வந்தது: ஏன் இதனை ஆசிரியர் எடுத்து ஒதுகின்றார்? சேக்கிழார் பாடிய திருத்தொண்டர் புராணத்துள் மிகச் சிறப்புடைய ஒரு வரலாறாகும் மனுநீதிச் சோழன் புராணம். ந்தக் கதையின் சிறப்பு ஒன்று உண்டு என்றால் அது லப்பதிகார காலத்திலேயே பெரு வழக்காய் இருந்தது என்பது ஒன்று தான். கண்ணகி பாண்டியனிடம் வழக்குரைக்கும்பொழுது, தான் பிறந்த சோணாட்டின் சிறப்பைக் கூறத் தொடங்கி,
- வாயிற் கடைமணி நடுநா நடுங்க,
ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சு கட, தான் தன் அரும் பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோன்; பெரும் பெயர்ப் புகார் என் பதியே ..... 1 if என்று கூறுகிறார். எனவே இளங்கோவடிகள் காலத்தே வழங்கிய இக்கதையைப் பின்னர் வந்த மூவர் முதலிகளுள் யாரும் பாட வில்லை. என்ன காரணம் என்பதும் விளங்கவில்லை. சோழர் களைப்பற்றிப் பெருமையாகப் பேசும் தேவாரம் ஏனோ இந்தக் கதையைக் கூறவில்லை மறுபடியும் இக்கதை பேசப்படுவது பெரியபுராணக் காலத்தில் தான். திருத்தொண்டத் தொகை யிலோ, நம்பிகளின் அந்தாதியிலோ இக்கதை இடம் பெறவு மில்லை. என்றாலும் சேக்கிழார் சோழர்கள் பெருமை பேசும் வாய்ப்புடையது என்ற காரணத்துக்காகவே இதனை எடுத்துக் கொண்டிருக்க வேண்டும். இஃதல்லாமலும் ஏனைய பல்லவ, பாண்டிய மன்னர்களுடன் ஒப்பிட்டுச் சோழர் எவ்வளவு உயர்ந்த வர்கள் என்பதை மறைமுகமாகக் காட்டவும் இதனைப் பயன் படுத்தி இருக்கலாம். வேத வழக்கை மிகுதியும் போற்றிய பல்லவர், சோழர், பாண்டியர்கட்குப் பழந்தமிழ் மன்னர்கள் பிராயச்சித்தம் என்பதுபற்றி என்ன நினைத்தார்கள் என்பதை அறிவிக்கவும் இக்கதையைப் பயன்படுத்தியிருக்கலாம். பெரிய புராணத்தில் வரும் இரண்டு பல்லவ மன்னர்களுள் ஒருவர் நாவரசருக்குத் தீங்கிழைத்தவர். மற்றவர் தன் அகங்காரத்துக்கு வாய்ப்பளிக்கக் கைலாயநாதர் கோவில் கட்டின வர். இவர்களை அல்லாமல் கழற்சிங்கர் மட்டுமே சுந்தரரால் பாடப்பெறும் தகுதி பெற்றவராவர்; அடுத்துக் காணப் பெறும் பாண்டியன் நின்ற சீர் நெடுமாறன் ஆவான். இவன் ஆளுடைய பிள்ளையால் ஆட்கொள்ளப் பெற்றாலும் அடியார்கள் தங்கி யுள்ள மடத்திற்குத் தீ வைக்க உடன்பட்ட குற்றத்திற்குள்ளா கிறான். எனவே அரசர்கள் வரிசையை எடுத்துக் கொண்டு