பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/333

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டு நெறியே சைவ நெறி 303 பார்த்தால் சோழர்கள் மட்டுமே இத்தகைய குற்றங்கள் சாட்ட இயலாத முறையில் இருந்துள்ளனர். புராணத்தில் இடம் பெறும் புகழ்ச் சோழர் முதலியவர்கள் பற்றி ஒரளவு விரிவாகக் கூறி இருப்பினும் மிகப் பழங் காலத்திலிருந்தே சோழர்கள் அப்பழுக் கற்றவர்களாய் இருந்து வந்ததுடன் சிவபக்தியிலும் சிறந்து விளங்கினர் என்பதையும் சொல்வதற்கு இக்கதை நன்கு இடந் தருதலின் சேக்கிழார் இதனை எடுத்துக் கொண்டாராதல் வேண்டும. அன்றியும் காப்பிய நாயகன் சுந்தரமூர்த்தி அடிகள் என்ற பழைய கொள்கையைவிடத் தொண்டு என்பதே வலுவுடையதாக உள்ளது என்பதும் முன்னர்க் கூறப்பெற்றதல்லவா? அந்த முறை யில் தொண்டு என்ற பண்பே காப்பிய நாயகன் இடத்தை ஏற்றுக் கொண்டுள்ளது என்று நினைப்பதனால், எந்த நாடு எந்த ஊரைப் பாட வேண்டும் என்ற பிரச்சனை எழப் போவதில்லை. என்றாலும் சிவபக்தியில் மிகுந்த சிவனடியார்கள் திருத்தொண்டத் தொகை யில் கண்ட்படி கணக்கெடுத்துப் பார்த்தால் சோனாட்டினரே அதிகமாக உள்ளனர். எனவே நாட்டுப் படலத்தில் சோணாட்டைப்பற்றிக் கூறுவது பொருத்தமுடையதேயாம். பழங்காலச் சோழர்கள் காலத்தில் உறையூர், காவிரிப் பூம்பட்டினம் என்ற ஊர்கள் தலைநகராக மாறி மாறி இருந்து வந்தது போலத் திருவாரூரும் இருந்திருக்க வேண்டும் எனவே தான் திருவாரூரரைப் பாட எடுத்துக் கொள்கிறார். திருவாரூர்க் கோவிலில் வீதி விடங்கன் சன்னதியில் இரண்டாம் திருச் சுற்றில் வடபுறச் சுவரில் விக்கிரம சோழனது 5ஆம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 1123 இல்) ஒரு கல்வெட்டு வெட்டப்பட்டது. சிவபிரானே மனு நீதியின் வரலாற்றைக் கூறுவதுபோல் அஃது அமைந்துள்ளது. விக்கிரம சோழன் காலத்தில் இக் கதை நன்கு அறியப்பட்டிருந்திருக்க வேண்டும். எனவே சேக்கிழார் இதனைப் பயன்படுத்துகிறார் என்று பெரியபுராண ஆராய்ச்சி ஆசிரியர் தம் நூலில் 237ஆம் பக்கத்தில் குறிப்பிடு கிறார். வைதிக மறுப்பை வெளியிட வாய்ப்பாகப் பயன்படுகிறது. வரலாற்றறிவு மிக்குடைய சேக்கிழார், நம்பியின் திருவந்தாதி யில் குறிப்புக்கள் இருந்தாலும் வேறு சான்றுகள் இல்வழி அவற்றை ஒதுக்கிவிடும் சேக்கிழார், யாருடைய பாடல்களிலும் எவ்விதச் சான்றும் இல்லாத இக் கதையைத் துணிந்து எடுத்துப்