பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/336

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 06 பெரியபுராணம்- ஓர் ஆய்வு 'சிந்தை தளர்ந் தருளுவது மற்றிதற்குத் தீர்வன்றால் கொந்தலர்தார் மைந்தனை முன் கோவதை செய்தார்க்கு ဖုခ္ရစ္ அந்தண்ர்கள் விதித்த முறை வழி நிறுத்தல் அறம்என்றார். இவ்வாறு அமைச்சர்களும் கூறினார்கள். என்றால் அரசகுமாரன் பிராயச்சித்தம் செய்ய நினைந்தது புதுமையன்று என்பதையும் அன்றைய சமுதாய நிலையை இக் கூற்றுக்கள் தெளிவுறுத்துகின்றன என்பதையும் உய்த்துணரலாம். தமிழர் அறநெறி வைதிக அறநெறியில் மாறுபட்டது: இதைக் காட்டவே இக்கதை. ஆனால் அமைச்சர்களின் இந்த அறிவுரைகட்கு மன்னன் கூறிய விடை நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறது. 'வழக்கென்று நீர் மொழிந்தால் மற்றதுதான் வலிப்பட்டுக் குழக்கன்றை இழந்தலறும் கோவுறுநோய் மருந்தாமோ?' இத்தகைய சூழ்நிலையில் இவ்வாறு பிராயச்சித்தம் செய்வது தான் முறைமை என்று அனைவரும் ஏற்றுக் கொள்கின்றனர். இந்த வாதம் பேசும் அரசகுமாரன், அமைச்சர், அந்தணர் என்பவர் அனைவரும் ஒன்றை மறந்துவிட்டதாகத் தெரிகிறது. பிராயச்சித்தம் அல்லது கழுவாய் என்பது அரசகுமாரனுக்குத் தானே தவிரப் பசுவுக்கு அன்றே! இப்பொழுது தமிழ் மன்னன் மனுநீதி, அமைச்சரிடம் கேட்கும் வினா அதுபற்றியதே ஆகும். 'பிராயச்சித்தம்' என்ற ஒன்று கன்றை இழந்து வருந்தும் இத் தாய்ப் பசுவின் துயரத்தைப் போக்க உதவுமா? இந்த வினாவுக்கு யாரும் விடை கூறவில்லை. இதன் பிறகு அத் தமிழ்ச் சோழன் அரசனுடைய கடமை என்ன என்பதுபற்றிப் பேசுவதும் புதுமையாகவேயுளது. "மாநிலங் காவலனாவான் மன்னுயிர் காக்குங்காலை தானதனுக் கிடையூறு தன்னால்தன் பரிசனத்தால் ஊனமிகு பகைத்திறத்தால் கள்வரால் உயிர்தம்மால் ஆணபயம் ஐந்தும்தீர்த் தரசாள்வான் அல்லனோ?' "என்மகன்செய் பாதகத்துக் கிருந்தவங்கள் செயஇசைந்தே அன்னியன் ஓர் உயிர்கொன்றால் அவனைக்கொல் வேனானால்