தொண்டு நெறியே சைவ நெறி 3 0 7 தொன் மனுநூல் தொடை மனுவால் துடைப்புண்ட தெனும் வார்த்தை மன்னுலகில் பெற மொழிந்தீர்! மந்திரிகள் வழக்கென்றான்' ' இவ்வாறு கூறிய மன்னவனை மறுத்துப் பேசும் அமைச்சர்கள் தம் கட்சியை மறுபடியும் எடுத்துப் பேசுகின்றனர். 'நின்ற நெறி உலகின் கண் இதுபோல்முன் நிகழ்ந்ததால் பொன்று வித்தல் மரபன்று மறைமொழிந்த அறம்புரிதல் தொன்றுபடு நெறியன்றோ தொல்நிலம்காவல: ' என்றார். இவ்வாறு பேசும் அமைச்சர்கள் இத்தகைய குற்றம் முன்னர் நிகழ்ந்துள்ளது போலவும், அதற்கு அறநூல் பிராயச்சித்த வழியைக் கூறியுள்ளது போலவும் கூறுவது கேட்டு மன்னன் சினம் கொள்கிறான். இவ்வண்ணம் பழுதுரைத்தீர்' என்று கூறித் தொடர்ந்து பேசும் பொழுது, 'அவ்வுரையில் வருநெறிகள் அவை நிற்க, அறநெறியின் செவ்விய உண்மைத்திறம் ஓர் சிந்தைசெயாது உரைக்கின்றீர் எவ்வுலகில் எப்பெற்றம் இப்பெற்றித்தாம் இடரால் வெவ்வுயிர்த்துக் கதறிமணி எறிந்து விழுந்தது: ' என அவர்கட்கு அறநெறியின் நுணுக்கம் தெரியவில்லை என்று கூறிய வேந்தன் அதனையும் அறிவுறுத்துகிறான். 'எனமொழிந்து மற்றிதனுக்கு இனி இதுவே செயல் இவ் ஆன் மனம் அழியும் துயர் அகற்ற மாட்டாதேன் வருந்தும் இது தனதுறுபேர் இடர்யானும் தாங்குவதே தருமம்என அனகன்அரும் பொருள்துணிந்தான் அமைச்சரும் அஞ்சினர் is {} அகன்றார். ' இவ்வாறு கூறிய மன்னவன் தேர்க்காலில் மகனைக் கிடத்தி அவன்மேல் தேரைச் செலுத்தினான் என்று பேசுகிறது பெரிய புராணம். х . - இந்த வரலாற்றை என்ன காரணங்களால் சேக்கிழார் இங்குக் கூறுகிறார் என்பதைச் சற்றுச் சிந்திக்க வேண்டும். திருஞானசம்பந்தர் காலத்தில் வைதிக சமயத்துக்கும் தொல்
பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/337
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை