3 I 0 பெரியபுராணம்- ஓர் ஆய்வு அர்ச்சனை, தமிழில் வழிபாடு என்பவற்றை நிலை நாட்டினார் என்பதையும் காண்கிறோம். இவற்றை நன்குணர்ந்து வரலாற்றறிவு மிகுதியும் பெற் றிருந்த சேக்கிழார் இவற்றை வலியுறுத்தி மேலும் சில கருத்துக் களையும் கூறவேண்டும் என்று கொண்ட தம் குறிக்கோளை வெளியிடவே மனுநீதியின் கதையைப் பயன்படுத்துகிறார். தவிர்க்க முடியாத தவறு ஒன்று நிகழ்ந்துவிடுமாயின் அதற்குக் கழுவாய் யாது என்பது பற்றி இத் தமிழர் கொண்டிருந்த கருத்துக் களும் வைதிகர் கொண்டிருந்த கருத்துக்களும் நிரம்ப வேறுபாடுள்ளவை. புதிதாகப் புகுந்த வைதிகம் பிராயச்சித்தம் செய்து விட்டால் செய்த பாபம் போய்விடும் என்று கூறுகிறது. இந் நாட்டில் அதனை நம்பி ஏற்றுக் கொண்டவர் பலராவர். இளவரசன் இதையே நினைக்கின்றான். அமைச்சர்களும் இதையே கூறுகின்றனர். அவர்கள் அறிந்தவரையில் தொன்று தொட்டு இம் முறைதான் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது என்றும் அமைச்சர்கள் கூறுகின்றனர். ஆனால் மன்னன் கேட்ட வினாவிற்கு அவர்களால் விடை இறுக்க முடியவில்லை. 'குழக் கன்றைஇழந்து அலறும் கோவுறு நோய்க்குப் பிராயச்சித்தம் மருந்தன்று' என்று மன்னவன் கூறுகையில் அமைச்சர்கள் அதனை மறுத்துக் கூற வழியில்லாமல் போய் விடுகிறது. அப்படியானால் இந்த அமைச்சர்கள் மன்னன் கருத்துப்படி சிந்திக்காத காரணம் யாது? வைதிகர்களைப் பொறுத்தமட்டில் மனிதன் உயர்ந்தவன். அவனுடைய நன்மை தீமைகட்கு ஏனைய விலங்குயிர்கள் பலியிடத் தகுதி வாய்ந்தவையே யாகும். மிருக பலி செய்து வேள்விகள் நடத்துபவர்கள் தங்கள் சொந்த நன்மைக்காகவே இவற்றில் ஈடுப்பட்டனர். இங்ங்னம் ஓர் உயிரைப் பலியிட்டுத் தமக்கு நன்மை தேட யாகங்களைச் செய்தமையால்தான் கெளதம புத்தர் வேதம், வேள்வி என்பவற்றை ஒரு சேர எதிர்த்தார். எனவே விலங்குகளைக் கொல்வதில் தவறு இல்லை என்று கருதுகின்ற சமுதாயம் வளர்ந்துவிட்ட நிலையில் அரச குமாரனும், அமைச்சர்களும் பிராயச்சித்தம் செய்து பசுவதைப் பாவத்திலிருந்து விடுதலை வாங்கிக் கொள்ள முயன்றனர். ர்களுள் எவருமே பசுமாட்டைப்பற்றிக் கவலைப்பட்ட தாகவே தெரியவில்லை. வைதிக நெறி கூறும் வழியில் செல்பவர் கட்கும், பழைய அறநெறியில் செல்பவர்கட்கும் இடையே நடந்த போராட்டத்தை அறிவிப்பதே இந்த வரலாறு. இதுதான் அறம் என்று கூறாமல் இது வழக்கம் என்று அமைச்சர்கள் கூறுவதைக்
பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/340
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை