தொண்டு நெறியே சைவ நெறி 3 1 I கவனிக்கவேண்டும். புதிய வழக்கத்துக்கும் புதிய மரபுக்கும் அடிமையாகிவிட்ட இத் தமிழர் தம்முடைய பழைய அறநெறியை மறந்தே விட்டனர் போலும்! அப்பழைய அறநெறி யாது? குறள் அதனை அழகாகச் சுட்டிச் செல்கிறது. 'அறிவினால் ஆகுவதொன்றுண்டோ பிறிதின் நோய் தந்நோய் போல் போற்றாக் கடை." பிற உயிர்கள் படுந்துன்பத்தைப் போக்க முயலுதல், அது இயலாத வழி அத் துன்பத்தைத் தானும் ஏற்றுக் கொண்டு அனுபவித்தலும் செய்வதே ஒருவன் அறிவு பெற்றதன் பயனாகும். தனக்கு நோய் வந்தால் ஒருவன் என்ன செய்கிறான்? பல்லாற்றானும் முயன்று அதனைப் போக்கப் பாடுபடுகிறான். அது இயலாத வழி அந்நோயை, அதன்கொடுமைகளை அனுபவித்துத் தீாக்கின்றான். அதே போலப் பிற உயிர் படும் துன்பத்தை எவ்வாற்றானும் போக்க முயல வேண்டும். போக்க முடியாத பொழுது அவ்வுயிர்படும் துன்பத்தைத் தானும் அனுபவிக்க வேண்டும். பிறிதின்நோயைத் தனக்கு வந்த நோய் போல் போற்றுதலாவது இதுதான் என்பது இந்த நாட்டார் கண்ட அறம். இந்த அறத்தைக் கடைப்பிடிக்கத் தொடங்கியவனுக்குப் பிராயச்சித்தம் என்பதில் நம்பிக்கை இராது. தனக்குத் தொடர் பில்லாத பிறிதொன்றின் நோயைக்கூடப் போக்க மேலே கூறிய வழியில் செல்ல வேண்டும் என்பது அறநூலின் நுணுக்கம். சோழ மன்னனுடைய செய்தியில் பிறிது என்ற பசுவைக் காக்க வேண்டிய நேரிடைப் பொறுப்பு அரசர் என்ற முறையில் அவனையே சேர்கிறது. தன்கீழ் வாழும் உயிர்களுள் ஒன்றாகிய பசுவுக்கு இடையூறு அவனுடைய மகனாலேயே ஏற்பட்டது என்பதால் அவன் தன் கோல் பிழைத்ததாகவே கொள்கிறான். எனவே பசுவின் துயரைப் போக்க முயல்வதும், முயற்சி வெல்ல வில்லையானால் தானும் அத் துயரை ஏற்று அனுபவிப்பதுமே செய்யப்பட வேண்டிய செயலாகும் என்ற முடிவுக்கு வருகிறான். இதனைத்தான். w w no e : * * * * * * அறநெறியின் 'செவ்விய உண்மைத் திறம் நீர் சிந்தை செய்யாது உரைக்கின்றீர்' என்று மன்னன் கூறுகிறான். அறநெறியின் உண்மைத் திறம் அறிந்தவர்கள் மேலே கூறியவற்றை அறிவர். அதன்ஆழம் தெரியாமல் மேனோக்காகப் பேசுபவர்கள் பிராயச்சித்தம் எனப் பேசுவர். - 22
பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/341
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை